உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி.. தமிழகத்தில் எப்போது? உதயநிதி பேட்டி!
தமிழகத்தில் முதல்முறையாக உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025 நவம்பர் 28 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலகெங்கும் இருந்து 29 அணிகள் விளையாட உள்ளன என தெரிவித்தார்.
மதுரை, செப்டம்பர் 24 : மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முதல்முறையாக உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025 நவம்பர் 28 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலகெங்கும் இருந்து 29 அணிகள் விளையாட உள்ளன என தெரிவித்தார்.