கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் அஞ்சலி..

Jul 13, 2025 | 8:14 PM

பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். நடிகர் விக்ரமுடன் இணைந்து வெளியான படம் சாமி மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றார். அவரது உடலுக்கு முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் தெலங்கானா பாஜக மாநில தலைவர் ராமசந்திர ராவ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.