உத்தரப்பிரதேசத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கபடி வீரர் மரணம்
உத்தரப்பிரதேசம், புலந்தஷஹர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அளவிலான கபடி வீரர் ஒருவர், ஒரு மாதத்திற்கு முன் சாலையில் திரிந்த நாய்க்குட்டியை மீட்டு தன் வீட்டுக்கு எடுத்து வந்து பராமரித்திருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் அவரைக் கடித்திருக்கிறது. அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் தெரிய வர மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் கடுமையான நோய் அறிகுறிகளுடன் அவரது வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வரைலாகியது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நாய் கடித்த உடன் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.