வன்னியர் சங்க கட்டிடத்திற்கு பூட்டுப்போட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள்

Sep 12, 2025 | 11:08 PM

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி பாமக சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அதிகரித்திருக்கும் நிலையில், வன்னியர் சங்க கட்டடத்துக்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.