ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் பகுதியில் தொடரும் துப்பாக்கிச் சூடு.. பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம்

Jul 03, 2025 | 6:42 PM

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் நடவடிக்கையை தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் நடவடிக்கையை தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதியில் குறைந்தது மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.