டெல்லியில் குண்டுவெடிப்பில் சிதறிய கார்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே ஒரு கார் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் துண்டு துண்டாக சிதறின. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும், ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவின் குழுவும் சம்பவ இடத்தில் உள்ளது. வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Published on: Nov 10, 2025 08:59 PM