Viral Video : இளைஞர்களுக்கு டப் கொடுத்த தாத்தா.. கார் ஸ்டண்ட் செய்த வீடியோ வைரல்!

Elderly Duos Thrilling Car Stunt : இணையத்தில் வைரலாகும் வீடியோவில், இரு முதியவர்கள் ரேஸ் காரில் அசத்தலாக சாகசம் செய்கின்றனர். இளைஞர் ஒருவரிடம் இருந்து கார் சாவியைப் பெற்று, எதிர்பாராத காரியத்தைச் செய்து இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். மில்லியன் கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்ற இந்த வீடியோ, வயதானவர்களின் ஆற்றலைக் காட்டுகிறது.

Viral Video : இளைஞர்களுக்கு டப் கொடுத்த தாத்தா.. கார் ஸ்டண்ட் செய்த வீடியோ வைரல்!

வைரல் வீடியோ

Published: 

14 May 2025 22:11 PM

பொதுவாக அவ்வப்போது இணையதளங்களில் கார் முதல் பைக் (Car to bike) வரை ரேஸ் (Race) செய்து இளைஞர்களின் சாகசங்கள் (Adventures of youth) இணையதளங்களில் வைரலாவதுண்டு. சிலர் ரேஸ் செய்கிறேன் என்ற விதத்தில் கடும் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். அதை விடவும் ஆச்சரியமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தாத்தாக்கள் இருவரும் (Two old people)  இணைந்து ரேஸ் காரை சுலபமாகத் திருப்பி, புழுதி பறக்கவிடும் வீடியோ இணையத்தில் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரேஸ் காரை இளைஞர் ஒருவர் வைத்துள்ளார் என்று நினைக்கிறேன், அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் கார் சாவியை இளைஞரிடம் இருந்து பெற்றுக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்கிறார்.

அந்த காரில் அவருடன் மற்றொரு முதியவரும் இருக்கிறார். இந்த வீடியோ ஆரம்பத்தில் பார்ப்பதற்கு இந்த வயதானவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைக்க வைக்கிறது. ஆனால் அவ்வாறு இல்லை, அந்த இரு வயதான முதியவர்கள் காரில் ஏறி, ரேஸில் காரை சறுக்கிக்கொண்டு செல்வது போல, காரை நின்ற இடத்திலே சறுக்கிச் சாகசம்தான் செய்துள்ளார்கள்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இந்த இரு தாத்தாக்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பலர் இந்த வீடியோவை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த தரமான வீடியோவை நீங்களே பாருங்கள் .

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :

இந்த வீடியோவில், சாதாரணமாக இரு முதியவர்கள் ஒரு காரின் முன் நிற்கிறார்கள். அதன் பின் அவர்கள் வீடியோ எடுக்கும் நபரிடம் இன்று அந்த ரேஸ் காரின் சாவியை வாங்கி காரை ஸ்டார்ட் செய்கிறார்கள். இதை நாம் பார்க்கும் பொது அவர்கள் எவ்வாறு காரை ஓட்டுவார்கள் என்று நம்ம சந்தேகிக்க வைக்கிறது. ஆனால் அந்த இரு முதியவர்களும் காரில் ஏறிச் செய்த விஷயம் பெரும் அதிற்சியைத்தான் தந்தது என்று கூறலாம்.

அந்த இரு தாத்தாக்களும் இணைந்து காரை ரேஸில் சறுக்குவது போல, அந்த காலி இடத்தில் சறுக்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த் வீடியோவை kishan.singh.chahal என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வைகளைத் தொட்டுள்ளது. மேலும் 13 ஆயிரத்திற்கும் மேலான லைக்குகளை பெற்றுள்ளது.மேலும் பல இணையவாசிகள் வீடியோவின் கீழ் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களைப் பார்க்கலாம்.

வைரல் வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் மாறுபட்ட கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள், அதில் சில கருத்துக்களைப் பார்க்கலாம். இதில் முதல் பயனர் ஒருவர் “இந்த வீடியோ ஆரம்பிக்கும்போது நானும் அவர்கள் காரை ஓட்டப்போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் காரை இவரும் ஸ்கிட் செய்வார்கள் என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். இரண்டாவது பயனர் “அந்த இரு முதியவர்கள் இருவரும் வயதுக்கு அப்பாற்பட்ட செயல்களை செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.