ரிசர்வ் பண்ண டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றலாம்.. விதிகள் என்ன என்ன? | TV9 Tamil News

ரிசர்வ் பண்ண டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றலாம்.. விதிகள் என்ன என்ன?

Published: 

02 Mar 2026 21:48 PM

 IST

Change Name Of The Passenger In Reserved Train Ticket | இந்திய பொதுமக்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில், முன்பதிவு செய்த டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரதானமாக உள்ளது தான் ரயில் சேவை. குறைந்த செலவில் மிக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், ரயில் பயணத்தின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைக்கு தீர்வு காணும் அசத்தல் அம்சத்தை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. 

இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரதானமாக உள்ளது தான் ரயில் சேவை. குறைந்த செலவில் மிக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், ரயில் பயணத்தின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைக்கு தீர்வு காணும் அசத்தல் அம்சத்தை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. 

2 / 5

அதாவது வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டியது உள்ளது. இல்லை என்றால் டிக்கெட் கிடைக்காது என பெரும்பாலான மக்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாக கூட டிக்கெட் புக் செய்துவிடுகின்றனர். இந்த நிலையில், அவர்களது பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படும்போது கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். 

3 / 5

ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணிகள் கடைசி நேரத்தில் தங்களது பயணத்தில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டால், அந்த டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒரு நபருக்கு அந்த டிக்கெட்டை மாற்றிக்கொள்ளும் வசதியை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது. அதாவது ரயில் டிக்கெட்டை ரிசர்வ் செய்யும்போது கொடுத்த பயணியின் பெயரை மாற்றம் செய்ய முடியும். 

4 / 5

இந்த வசதியின் மூலம் வேறு ஒரு நபர் உங்களது டிக்கெட்டில் பயணம் செய்யலாம். இந்த அம்சத்தை இந்திய ரயில்வே வழங்கி வந்தாலும் அதில் சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது நீங்கள் ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்ற வேண்டும் என்றால் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே ரயில்வே முன்பதிவு அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

5 / 5

குறிப்பாக விண்ணப்பதுடன் மின்னணு முன்பதிவு சீட்டின் பிரிண்ட் அவுட் மற்றும் யாருடைய பெயருக்கு மாற்ற வேண்டுமோ அவரின் அடையாள அட்டை நகலையும் இணைக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. சலுகை விலையில் பெறப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் வசதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us
Related Stories