2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் – எப்படி தேர்ந்தெடுப்பது ?

Best Laptops for Students 2025 : இந்த டிஜிட்டல் யுகத்தில் மாணவர்களுக்கு முன்பு போல நோட்புக்குகள் மட்டுமே போதாது. குறிப்பாக இன்றைய மாணவர்கள் அதிகம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றுவருகிறார்கள். அவர்களுக்கு சிறந்த லேப்டாப்புகளை தேர்ந்தெடுத்து வழங்குவது அவசியம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த லேப்டாப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?

மாதிரி புகைப்படம்

Published: 

30 Apr 2025 22:10 PM

இன்றைய டிஜிட்டல் உலகத்தில், மாணவர்களுக்கான தேவைகள் முழுமையாக மாறிவிட்டன.  புத்தகம் மற்றும் நோட்புக் மட்டும் போதுமானது என்ற காலம் எப்பொழுதோ போய்விட்டது. ஆன்லைனில் (Online) கல்வி கற்கும் மாணவர்களுக்கு , ஒரு நல்ல லேப்டாப்பின் (Laptop) தேவை மிக அவசியமான ஒன்றாகியுள்ளது. மேலும் பிராஜெக்ட் வொர்க் போன்ற பல விஷயங்களுக்கு லேப்டாப் அவசியமாகிறது. இணையவழி வகுப்புகள், திட்டப் பணிகள், பவர் பாயிண்ட் பிரெசென்டேஷன்கள், மற்றும் ரிசெர்ச் வேலைகள் போன்றவற்றுக்கு ஒரு நம்பகமான லேப்டாப்ப் முக்கிய உதவியாக இருக்கிறது. இதனால், நாங்கள் இங்கு 2025-ல் மாணவர்களுக்கு பொருத்தமான மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த லேப்டாப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

எச்பி 15எஸ் ஐ3 லேப்டாப்  (HP 15s, 12th Gen i3 Laptop)

முதலில், HP நிறுவனத்தின் 15s மாடல் லேப்டாப்பு, Intel Core i3 12வது ஜெனரேஷன் புரொசெசருடன் வருகிறது. இதில் 8GB RAM மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் தரப்பட்டுள்ளது. Full HD டிஸ்ப்ளே, சிறப்பான செயல்திறன் மற்றும் Windows 11 உடன் Microsoft Office 2021 என அனைத்து தேவையான மென்பொருள்களும் உள்ளன. இது ஒரு மாணவருக்கு தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

டெல் 14 லேப்டாப், இன்டெல் கோர் ஐ3 (Dell 14 Laptop, Intel Core i3 11th Gen)

டெல் நிறுவனத்தின் 14 இஞ்ச் லேப்டாப் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இது Intel i3 11வது ஜெனரேஷன் புரொசெசர், 8GB RAM, 512GB SSD, மற்றும் வெறும் 1.48 கிலோ எடையுடன் வருகிறது. மாணவர்கள் தினசரி வகுப்புகள் மற்றும் வீடியோ கால், ரிசெர்ச் போன்றவற்றுக்காக பயன்படுத்த இது சிறந்த மாடலாக பார்க்கப்படுகிறது.

அசுஸ் விவோபுக் 15, இண்டெல் ஐ3 (Asus Vivobook 15, 12th Gen Intel i3)

அசுஸ்  மாடல் மாணவர்களுக்குப் பெரும் நன்மை தரக்கூடியதாக பார்க்கப்படுகிறது. 12வது ஜெனரேஷன் i3 புரொசெசர் கொண்ட இதன் விலை மற்ற மாடல்களைவிட குறைவாகவும், அதன் செயல்திறன் அதிகமாகவும் உள்ளது. Fingerprint சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் அடங்கும். இது நீண்ட நேரம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு ஒரு நல்ல தொழில்நுட்ப உதவியாக இருக்கும்.

லெனோவோ ஐடியா பேட் ஸ்லிம் 3 இன்டெல் கோர் ஐ3 (Lenovo IdeaPad Slim 3 Intel Core i3 12th Gen)

இந்த மாடல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றிருக்கும் ஒரு லேப்டாப். இது Intel i3 12வது ஜெனரேஷன், 8GB RAM மற்றும் 512GB SSD ஆகியவை கொண்டுள்ளது. மிகச் சிறந்த டிஸ்ப்ளே மற்றும் மென்மையான செயல்திறன் கொண்ட இது மாணவர்களுக்கும் பொருத்தமான தேர்வாக அமையும்.

எம்எஸ்ஐ மாடர்ன் 14 லேப்டாப் (MSI Modern 14 Laptop, Intel i3 12th Gen)

இது மிகவும் லைட் வெயிட் கொண்ட  இந்த லேப்டாப், அதிக தூரம் பயணிக்க வேண்டிய மாணவர்களுக்கு உகந்தது. 14 இஞ்ச் FHD டிஸ்ப்ளே மற்றும் Intel UHD கிராபிக்ஸ் கொண்ட இந்த லேப்டாப், கல்விக்கேற்ற அனைத்து தேவைகளையும் சிறப்பாக நிறைவேற்றும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)