Android 16 – ஏஐ, கூடுதல் பாதுகாப்பு…. – ஒரே அப்டேட்டில் இவ்வளவு வசதிகளா?
Android 16 : கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு 16 என்ற அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்கள், செயற்கை நுண்ணறிவு, புதிய டிசைன் என பல முக்கிய மேம்பாடுகள் இதில் உள்ளன. மேலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள Find Hub, ஜெமினி ஆகியவை பயனர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கின்றன.

மாதிரி புகைப்படம்
ஆண்ட்ராய்டு (Android) என்பது கூகுளின் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமாகும் (Operating System). உலகெங்கிலும் கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு, மொபைல் போன்கள் பயன்படுத்தும் முறையை மிகவும் எளிமையாகவும் சீரானதாகவும் மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கூகுள் புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 16 என்ற புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை கூகுள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. முன்பை காட்டிலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன.
கூடுதல் பாதுகாப்பு
Advanced Protection என்ற பெயரில் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்புல வழங்க
-
Intrusion Logging – உங்கள் மொபைலில் நடந்த அனைத்து பாதுகாப்பு சம்பவங்களும் cloud-இல் பதிவு செய்யப்படும்.
-
USB Protection – அபாயகரமான அல்லது பிரச்னைக்குரிய USB இணைப்புகளை தடுக்க உதவுகிறது.
-
Wi-Fi Auto Reconnect Block – வைஃபை மூலம் பாதுகாப்பற்ற நெட்வொர்க்குகளுக்கு தானாக இணையும் அம்சத்தை தடுக்கும்.
-
Scam Detection Integration – கூகுளின் தற்போது மோசடிகளை கண்டறியும் அம்சம்
மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் உதவும்
முன்னதாக ஆண்ட்ராய்டில் இருந்த Find My Device இப்போது Find Hub ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் சேட்டிலைட் கன்க்டிவிட்டியுடன் வருகிறது . அதாவது மொபைல் சிக்னல் இல்லாத இடங்களிலும் உங்கள், பொருட்களை, அல்லது நபர்களை கண்டுபிடிக்க இது உதவுகிறது. திருவிழா, பொதுக்கூட்டம் போன்ற இடங்களில் நமது பொருட்களையோ அல்லது நண்பர்களையோ கண்டுபிடிக்க இந்த வசதி பெருதும் உதவும்.
கூகுளின் ஏஐ டூலான ஜெமினி தற்போது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் Wear OS ஸ்மார்ட் வாட்ச்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது பயணத்தின்போது ஏஐ உதவிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 16ல் கிடைக்கும் மேலும் சில புதிய அம்சங்கள்
- ஆண்ட்ராய்டு 16ல் புதிய டிசைன் மாற்றங்களை அறிமுகப்படுத்துகின்றன.
- Notification dismissal – நீங்கள் ஒரு நோட்டிஃபிகேஷனை நீக்கும்போது மற்ற நோட்டிஃபிகேஷன்களும் அதற்கு ஏற்றபடி மாறும்.
- ஆப்பை மூடும்போது background blur ஆகும்.
- Updated colour theming – உங்கள் தொலைபேசி மற்றும் வாட்ச்சில் நீங்கள் தேர்வு செய்யும் தீம்ஸ் முழுமையாக பிரதிபலிக்கும்.
- Quick Settings – இனி ஃபிளாஸ்லைட், டிஎன்டி போன்ற விருப்பங்களை குயிக் செட்டிங்கில் பயன்படுத்தலாம்.
- Live Updates – சில ஆப்களில் நடந்துகொண்டிருக்கும் செயல்கள் பற்றிய தகவல்களை நேரடியாக பார்வையிட உதவும்.
புதிய ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழக்கமான அப்டேட்ட போல அல்லாமல் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கக் கூடிய பல சிறப்பான வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதன் பாதுகாப்பு அம்சங்கள், யூனிக்கான டிசைன், செயற்கை நுண்ணறிவு அனைத்தும் ஒரே அப்டேட்டில் நமக்கு கிடைக்கும். இந்த அப்டேட்ட உங்கள் மொபைலுக்கு ஏற்றதா என ஒரு முறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.