பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை.. சரணடைந்த கணவன்.. சென்னையில் பகீர் சம்பவம்!

Chennai VCK Woman Councillor Murder : சென்னை திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே, பெண் கவுன்சிலரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவியை கொலை செய்துவிட்டு, திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன் ராஜ் சரணடைந்துள்ளார்.

பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை.. சரணடைந்த கணவன்.. சென்னையில் பகீர் சம்பவம்!

கொலை செய்யப்பட்ட பெண்

Updated On: 

04 Jul 2025 08:37 AM

சென்னை, ஜூலை 04 : சென்னை அருகே திருநின்றவூரில் விசிக பெண் நகராட்சி கவுன்சிலர் (Woman Councillor Murder) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் கவுன்சிலரை அவரது கணவரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, பெண் கவுன்சிலரை கொலை செய்த நபர், காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சென்னை அருகே திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி. இவர் 26வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மனாவுக்கு இருந்து வந்துள்ளார். இவரது கணவர் ஸ்டீபன் ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளராக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை

இவர்கள் இருவருக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கவுன்சிலர் மோதி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது ஆண் நண்பருடன் அடிக்கடி பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த கணவர் ஸ்டீபன் ராஜ், கோமதியுடன் கேட்டுள்ளார். இதனால், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து, கோமதி ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று, கோமதி ஆண் நண்பருடன் ஜெயராம் நகர் அருகே பேசிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த, ஸ்டீபன் ராஜ் நண்பர்கள், அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து, அங்கு வந்த ஸ்டீபன் ராஜ், மனைவி கோமதி மற்றும் அவரது நண்பர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆண் நண்பர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

சரணடைந்த கணவன்

இதனை அடுத்து, பெண் கவுன்சிலர் கோமதியை, ஸ்டீபன் ராஜ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், அங்கேயை கோமதி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கோமதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  இதனை அடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், மனைவியை கொலை செய்த ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதனை அடுத்து, ஸ்டீபனை கைது செய்த போலீஸ், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  முதற்கட்ட விசாரணையில், திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததால், பெண் கவுன்சிலரை அவரது கணவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.