AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

MLAக்களுக்கு அரசு சார்பில் புதிய கார்.. கொள்முதல் விதிகளில் அதிரடி திருத்தம் செய்த தமிழக அரசு!!

TN Government MLA Car Scheme: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டத்தின் கீழ் போக்குவரத்துப் படி விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு ரூ.26 லட்சமும், இதர எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 லட்சமும் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MLAக்களுக்கு அரசு சார்பில் புதிய கார்.. கொள்முதல் விதிகளில் அதிரடி திருத்தம் செய்த தமிழக அரசு!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Oct 2026 07:29 AM IST

சென்னை, அக்.22: தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிகளையும், அவர்களின் பொதுப்பணிச் செயல்பாடுகளையும் மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் தொடர்பான மிக முக்கிய அரசாணை வெளியாகியுள்ளது. முன்னதாகச் சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் மற்றும் இதர படிகளை வழங்குவதற்கான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேற்கண்ட திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை போக்குவரத்துப் படி விதிகளில் முறையான திருத்தங்கள் செய்யப்பட்டு, கார்கள் வாங்குவதற்கான விலை உச்சவரம்பு மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: “எதற்கெடுத்தாலும் ‘தேசவிரோதி’ முத்திரை குத்துவதா?”.. மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அண்ணாமலை!!

கார்கள் வாங்குவதற்கான விலை உச்சவரம்பு:

வெளியிடப்பட்டுள்ள விதிகளின் திருத்தத்தின்படி, அமைச்சர்கள், பேரவைத் தலைவர், துணைப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு கொரடா உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் உள்ளவர்களுக்குக் கார் கொள்முதல் செய்யத் தலா 26 லட்சம் ரூபாய் வரை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இதர சட்டமன்ற உறுப்பினர்கள் கார் வாங்குவதற்காக 15 லட்சம் ரூபாய் உச்சவரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி வரம்பிற்குள் வாகனத்தின் விலையுடன் வரிகள், பதிவு கட்டணம் மற்றும் வாகனக் காப்பீட்டு கட்டணம் (Insurance) உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகன விலை உச்சவரம்பானது ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் புதிய விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்முதல் நடைமுறைகளும், செலவினமும்:

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார்களை வாங்கும் முறைகள் குறித்தும் அரசு விரிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. அமைச்சர்களுக்கான கார்களை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யும் என்றும், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு கொரடா உள்ளிட்டோரின் வாகனங்கள் சட்டப்பேரவைச் செயலகத்தின் மூலமாகக் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த உத்தேசச் செலவினமாகச் சுமார் 40 கோடி ரூபாய் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப் பொருட்களை வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்வதற்கான ‘GeM’ (Government e-Marketplace) இணையதளப் போர்டல் மூலமாக இந்த வாகனங்கள் விரைவில் வாங்கப்பட்டுச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதையும் படிக்க : உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி – அடுத்த 2 நாட்களில் இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

திட்டத்தின் பயனும் மக்கள் பணி மேம்பாடும்:

அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் சீரிய நடவடிக்கையானது சட்டமன்ற உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. தொகுதிகளுக்குள் சென்று பொதுமக்களைச் சந்திப்பதற்கும், வளர்ச்சிப் பணிகளை விரைந்து ஆய்வு செய்வதற்கும் இந்த நவீன வாகன வசதி பெரிதும் உதவி புரியும். இதன் மூலம் அனைத்துத் தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதிகளில் மக்கள் பணிகளை எந்தவிதத் தடையுமின்றிச் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக இந்த வாகன வசதி விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us