6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. எத்தனை மாவட்டங்களில் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8, 2026: தமிழகத்தில் ஒருபுறம் மழை பெய்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் வெயில் தொடர்ந்து வாட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஈரோட்டில் 39.8, திருச்சியில் 39.1, கரூரில் 38.5, பாளையங்கோட்டையில் 38.4, மதுரையில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநில:
சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 37.5, நுங்கம்பாக்கத்தில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், உள் தமிழகத்தில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆவேச பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாவில் பகிர்ந்த “சுறா” படத்தின் காமெடி காட்சி வைரல்!
எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
செப்டம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பர் 9-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தொடர்.. நாளையும் கேள்வி நேரத்துக்கு நோ.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திடீர் அறிவிப்பு!
செப்டம்பர் 10-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 11-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.