Tamil Nadu News Live: திமுகவுக்கு தாவும் அதிமுக முக்கிய நபர்கள்.. ஷாக்கில் தொண்டர்கள்!
Tamil Nadu Breaking News Today 13 August 2025, Live Updates: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மாற்று கட்சியை நாடும் சூழலும் நடந்து வருகிறது.

தமிழ்நாடு செய்திகள்
LIVE NEWS & UPDATES
-
தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னையில் தூய்மை பணியாளர்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது, அதன்படி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூய்மை பணியாளர்களின் கோரிக்கை.. எஸ்.பி.வேலுமணி கொடுத்த உறுதி!
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் முறைகேடு.. திமுக மா.செ. கூட்டத்தில் கண்டனம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் வாக்குத்திருட்டு நடைபெறுவதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் குளறுபடி செய்யப்படுவதாகவும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு.. மேயர் ராஜினாமா செய்ய முடிவு?
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தில் மதுரை மேயரின் கணவர், அப்போதைய மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ராமதாஸ் vs அன்புமணி.. தேர்தல் ஆணையத்தில் முறையீடு!
அன்புமணி நடத்திய பொதுக்குழுவுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். இப்படியான நிலையில் தன்னுடைய தலைவர் பதவி மேலும் ஓராண்டு பொதுக்குழுவால் நீட்டிக்கப்பட்ட தீர்மானத்தை அளிக்க அன்புமணி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஊர்க்குருவி பருந்தாக முடியாது.. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த மைத்ரேயன்
என்ன தான் உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாக முடியாது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டிருப்பதாக அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி., மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
-
ஒரே மேடையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்.. நயினார் நாகேந்திரன் நம்பிக்கை!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகினார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில் ஒரே மேடையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் ஏறுவோம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் விரைவில் அமல்
அனைத்து மாவட்ட டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
சிறப்பு வகுப்புக்காக சென்ற 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு சிறப்பு வகுப்புக்காக சென்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
-
அன்வர் ராஜாவை தொடர்ந்து திமுகவில் இணைந்த மைத்ரேயன்!
அன்வர் ராஜாவை தொடர்ந்து அதிமுகவில் இருந்த முன்னாள் எம்.பி.யான மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மேலும் படிக்க
-
50 Years of Rajinikanth: சினிமாவில் 50 ஆண்டுகள்.. ரஜினிக்கு இபிஎஸ் வாழ்த்து!
தமிழ் சினிமாவில் தனக்கே உரிய ஸ்டைலாலும், தனித்துவமான நடிப்பாலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொன்விழா ஆண்டில் ஆகஸ்ட் 14ல் வெளியாகவுள்ள கூலி படம் வெற்றி பெறவும் அவர் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
இபிஎஸ் வெளியிட்ட பதிவு
திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும்
தனித்துவமான நடிப்பாலும்,
50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர்
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள… pic.twitter.com/6DXVh2xakm
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 13, 2025
-
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை – போக்குவரத்து மாற்றம்
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆகஸ்ட் 13, 2025 தேதியான இன்று மூன்றாம் கட்ட சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
-
அரசின் கொள்கை முடிவு அல்ல – தொடக்கக் கல்வி இயக்குநர்
இது குறித்து தெரிவித்துள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் , 207 பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர் எண்ணிக்கை அதிகரித்தவுடன் இந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். பள்ளி மூடல்கள் என்பது அரசின் கொள்கை முடிவு அல்ல. அதேபோல், பள்ளிகளை மூடுவது அரசின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்
-
207 அரசுப் பள்ளிகள் மூடலா -விவரம் என்ன?
207 அரசுப் பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதாக வெளியான செய்தியை தொடக்கக் கல்வி இயக்குநரகம் மறுத்துள்ளது. அது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளது.
-
ரூ. 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு – விசாரணை தீவிரம்
மதுரை மாநகராட்டியில் சுமார் ரூ. 150 கோடி ரூபாய் சொத்து வரியில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மதுரை டி.ஐ.ஜி அபினவ் குமார் தலைமையிலான குழு முழு வீச்சில் விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே மேயரின் கணவர் கைது செய்யப்பட்டார்
-
மோசடி வழக்கு – மதுரை மேயரின் கணவர் கைது
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார்
-
கோட்டயத்தைச் சேர்ந்த இருவர் கைது
கடத்தலில் ஈடுபட்டவர்கள் கோட்டயத்தைச் சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகைல் உபைதுல்லா என தெரியவந்துள்ளது. அதிகாரிகள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, பின்னர் நீதிமன்றக் காவலில் வைத்தனர்
-
Covai Crime News : உயர்ரக போதைப்பொருள் பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்
-
இலவச லேப்டாப் – 2 நிறுவனங்கள் தேர்வு
2025 – 2026 கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்துக்காக தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள் டெண்டர் வழங்கியிருந்தன. இந்த நிலையில் டெல் மற்றும் ஏசர் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
-
Mk Stalin : யாருக்கும் யாரும் அடிமையில்லை – மு.க.ஸ்டாலின்
பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு. க.ஸ்டாலின், திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா இங்கே யாருக்கும் யாரும் அடிமையில்லை என்றார்
-
ரூட் மாற்றம் விவரங்கள்!
காந்திபுரம், பூமார்க்கெட், வடகோவை வழியாக மேட்டுப்பாளையம் சாலை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு ரூட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.75 கோடியில் 1 கிமீ உருவாகும் பாலம்
மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.75 கோடியில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் உருவாகிறது. இதற்கான பணிகள் கிட்டதட்ட 75 சதவீதம் முடிவடைந்துவிட்டது. தற்போது, பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
-
இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கான் தொழில் முதலீடு குறித்த ஆலோசனை இருக்கும் என தெரிகிறது
-
மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற உள்ளதால், மூன்று மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது
-
இரவு நேரங்களில் மழை
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை, கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பதிவானது.
-
Chennai Rains : ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதி வானிலை நிலவரத்தை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . அதேபோல், அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்
-
இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி
வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 13 2025 இன்று உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 48 மணி நேரத்தில் சற்று வலுவடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
Tamil Nadu Weather : லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
Breaking News in Tamil Today 13 August 2025, Live Updates: தமிழகத்தில் ஆகஸ்ட் 13, 2025 அன்று வடமேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு (Tamil Nadu Rains) வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடவும், தொழுகை நடத்த தடைவிதிக்க வேண்டும் என ராமலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் 3 வது நீதிபதி நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு ஆகஸ்ட் 13, 2025 அன்று விசாரணைக்குவரவிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 13, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்தப் பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். மேலும் பல அப்டேட்களை காணலாம்