தரமற்ற ORS பவுடர்கள் வயிற்றுபோக்கு, நீரிழப்பை ஏற்படுத்தும்.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Tamil Nadu Health Department Warning | வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்காக பொதுமக்கள் ஓஆர்எஸ் கரைசல்களை பயன்படுத்தும் நிலையில், அது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஓஆர்எஸ் கரைசல் பயன்படுத்துவது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 1 : சந்தையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பு கரைசல் (ORS – Oral Rehydration solution) பவுடர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் நீர் இழப்பை அதிகரிக்க செய்யும். எனவே பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ் பவுடர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை (Tamil Nadu Health Department) இயக்குனர் செல்விநாயகம் தெரிவித்துள்ளார். வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல்நல பிரச்னைகளுக்காக அதிக ஓஆஎஸ் பவுடர்கள் அளவில் உட்கொள்ளப்படும் நிலையில் சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. இந்த நிலையில் ஓவரஸ் பவுடர்கள் குறித்து பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது என்ன என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஓஆர்எஸ் பவுடர்
தமிழகத்தை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்கும் இந்த ஓஆர்எஸ் பவுடர்கள் வழங்கப்படுகின்றன. வயிற்றுபோக்கு, வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த ஓஆர்எஸ் என அழைக்கப்படும் உப்பு மற்றும் சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது. மருத்துவமனைகள் மட்டுமன்றி, சில பொதுமக்கள் தாங்களே மருந்தகங்கள் மூலம் இந்த கரைசலை வாங்கி பயன்படுத்துகின்றனர். மருத்துவர்களிடம் அனுமதி பெறாமல் அவர்களே இந்த கரைசலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஓஆர்எஸ் கரைசல் – பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் இருந்து நீர்ச்சத்து அத்தியாவசிய உப்பு கணிசமாக வெளியேறும் அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் கடுமையான நீர் இழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம். எனவே உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள உப்பு சர்க்கரை கரைசலை பயன்படுத்துவதால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழிப்பை தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
திரவ உப்பு சர்க்கரை கரைசல் என்று சந்தையில் வணிகர் ரீதியில் பல்வேறு பெயர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது பொதுவாக நீர்ச்சத்து பானங்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் ஆற்றல் மேம்படுத்தக்கூடிய திரவங்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய அளவில் தாது உப்புக்கள், குளுக்கோஸ் ஆகியவை இல்லை. இந்த விதமான பானங்களை பருகுவதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்ய முடியாது மாறாக இது வயிற்றுப்போக்கை அதிகரிப்பதன் நீர் இழப்பு அதிகரிக்க செய்யும். எனவே பொதுமக்கள் தரமான ஓஆர்எஸ் பவுடர்களை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.