Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டாஸ்மாக் விவகாரத்தில் ED அதிரடி.. உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.. நாளை விசாரணை!

ED Tasmac Raid : டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. வழக்கை விரைந்து விசாரிக்க கோரி முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு 2025 மே 22ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வாதங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் விவகாரத்தில் ED அதிரடி.. உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.. நாளை விசாரணை!
டாஸ்மாக் முறைகேடுImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Published: 21 May 2025 06:45 AM

சென்னை, மே 21 : டாஸ்மாக் விவகாரத்தில் (tasmac) அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்க விரைவாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு முறையீட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, 2025 மே 22ஆம் தேதியான நாளை விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் பதிவாளர் தகவல் அளித்துள்ளார். டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் நிலையில்,  டாஸ்மாக் நிர்வாகம் உச்ச  நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது. 2025 மார்ச் 6ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக அமலாக்கத்துறை டாஸ்டாக் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. சென்னை தலைமை அலுவலகம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறை மூன்று நாட்கள் தொடர் சோதனையை மேற்கொண்டதது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

டாஸ்மாக் விவகாரத்தில் ED அதிரடி

மேலும், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது. அதாவது, டெண்டர் விடுவதில் முறைகேடு, பார் உரிம டெண்டர், மதுபானங்கள் கொள்முதல் என பல்வேறு விஷயங்களில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறியிருந்தார்.

மேலும், மதுபானம் பாட்டியலும் ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அறிவித்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசரணை 2025 மார்ச் மாதம் வந்தபோது முக்கிய தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. அதாவது, நாட்டின் நலனுக்காகவும், நன்மைக்காகவும் ED நடத்திய சோதனை என்றும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறிய நீதிமன்றம், அரசியல் உள்நோக்கம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க முடியாது என்றும் கூறியது.

சோதனைகளை நடத்துவதற்கு முன்பு மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற முன்நிபந்தனைக்கான வாதம் முற்றிலும் நியாயமற்றது மற்றும் மனசாட்சி இல்லாதது என்றும் நீதிமன்றம் கூறியது. அதோடு, டாஸ்மாக் வழகிகில் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்றது.

உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

மேலும், சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டப்படி விசாரணை நடத்தவும் அனுமதி அளித்தது.  இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதற்கிடையில், டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியது.

அதாவது, மீண்டும் சென்னை உட்பட பல்வேறு டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், டாஸ்மாக் இயக்குநர் விசாகனிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.  எனவே, உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு செய்த டாஸ்மாக் நிர்வாகம் வழக்கை விரைந்து விசாரிக்க கோரியுள்ளது.

இதனை ஏற்ற உச்ச நீதிமன்ற பதிவாளர், 2025 வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியது. வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வாதங்களை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி ரவி மனு!
மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி ரவி மனு!...
மதுபோதையில் விபத்து.. நடுரோட்டில் காவலர் தீக்குளித்து தற்கொலை
மதுபோதையில் விபத்து.. நடுரோட்டில் காவலர் தீக்குளித்து தற்கொலை...
மத நல்லிணக்கத்தை போற்றும் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
மத நல்லிணக்கத்தை போற்றும் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா...
மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி... விஷாலின் அடுத்தப் பட அப்டேட் இதோ
மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி... விஷாலின் அடுத்தப் பட அப்டேட் இதோ...
ரூ.1850 இருந்தால் போதும்..! சென்னை டூ புதுச்சேரிக்கு சுற்றுலா...
ரூ.1850 இருந்தால் போதும்..! சென்னை டூ புதுச்சேரிக்கு சுற்றுலா......
ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரயில்கள்... பல்லாவரத்தில் பரபரப்பு
ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரயில்கள்... பல்லாவரத்தில் பரபரப்பு...
சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்க வேண்டுமா? - இதை ட்ரை பண்ணுங்க!
சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்க வேண்டுமா? - இதை ட்ரை பண்ணுங்க!...
அன்புமணியுடன் மனக்கசப்பா? உண்மையை உடைத்த ராமதாஸ்
அன்புமணியுடன் மனக்கசப்பா? உண்மையை உடைத்த ராமதாஸ்...
சத்தீஸ்கர் துப்பாக்கிச்சூடு: 28 மாவோயிஸ்டுகள் பலி.. நடந்தது என்ன?
சத்தீஸ்கர் துப்பாக்கிச்சூடு: 28 மாவோயிஸ்டுகள் பலி.. நடந்தது என்ன?...
கோயிலில் தீபம் ஏற்றும்போது இதெல்லாம் செய்யாதீங்க..
கோயிலில் தீபம் ஏற்றும்போது இதெல்லாம் செய்யாதீங்க.....
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்!
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்!...