Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

சென்னையில் பிரபல உணவகத்தில் ஐ.டி ரெய்டு.. நடிகர் ஆர்யா வீட்டில் சோதனையா? உண்மை என்ன?

IT Raid In Chennai: கேரளாவை சேர்ந்த பிரபல sea shell உணவகம் சென்னையிலும் இயங்கி வருகிறது. சென்னையில் இருக்கும் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் பிரபல உணவகத்தில்  ஐ.டி ரெய்டு.. நடிகர் ஆர்யா வீட்டில் சோதனையா? உண்மை என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Jun 2025 14:05 PM

வருமான வரித்துறை சோதனை: வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், Sea shell உணவக கிளைகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நடிகர் ஆர்யா நடத்தி வந்த அண்ணா நகர் கிளையிலும் 8 ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் sea shell என்ற பிரபல அரேபியன் ஸ்டைல் உணவகத்தின் கிளைகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த உணவகம் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பல்வேறு கிளைகளை அமைத்து மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இதில் ஒரு கிளையை, நடிகர் ஆர்யா நடத்தி வந்துள்ளார். ஆனால் அந்த கிளையை தற்போது வேறு ஒருவரிடம் விற்றுள்ளார்.

பிரபல உணவகத்தில் வருமான வரித்துறை சோதனை:

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த உணவகத்தின் கிளைகள் உள்ளன. இதில் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கிளையை நடிகர் ஆர்யா நடத்தி வந்துள்ளார்.இதை தற்போது அவர் விற்று விட்டார் எனவும் கூறப்படுகிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்யா ரெஸ்டாரண்டை வாங்கி நடத்தி வந்துள்ளார்.

ஆனால் அதனை,  கேரளா தலச்சேரியைச் சேர்ந்த தலச்சேரியைச் சேர்ந்த குன்ஹி மூசா மற்றும் ஆர்யா உறவினரான அப்துல் சலாம் ஆகியோருக்கு விற்றுள்ளார். பின் கேரளாவைச் சேர்ந்த குன்ஹி மூசா மற்றும் ஆர்யாவின் உறவினரான அப்துல் சலாம் ஆகியோர் பார்ட்னராக ரெஸ்டாரண்டை நடத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல சென்னை, வேளச்சேரி, கொட்டிவாக்கம், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள Sea shell உணவக கிளைகளிலும், போயஸ் கார்டன் காமதேனு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அப்துல் சலாம் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. கேரள வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் ஆர்யா வீட்டில் சோதனையா?


இதற்கிடையே சென்னையில் இருக்கக்கூடிய நடிகர் ஆர்யாவின் வீட்டை சோதனை செய்ய வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அண்ணா நகரில் வைத்திருந்த உணவக கிளையை அவர் வேறு ஒருவரிடம் விற்று விட்டதால் அந்த சோதனை கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த வருமான வரித்துறை சோதனையில் நடிகர் ஆர்யாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சோதனை முடிவிலேயே எவ்வளவு வரிஏய்ப்பு நடந்திருக்கிறது, முறைகேடான பணப் பரிமாற்றம், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 இடத்தில் சதம் அடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை..
6 இடத்தில் சதம் அடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை.....
40 வயதுக்கு மேற்பட்டவரா? இந்த பரிசோதனைகள் செய்வது கட்டாயம்!
40 வயதுக்கு மேற்பட்டவரா? இந்த பரிசோதனைகள் செய்வது கட்டாயம்!...
கொடிக் கம்பம் நட்டால் கட்டணம் வசூல்.. உயர்நீதிமன்றம் அறிவுரை!
கொடிக் கம்பம் நட்டால் கட்டணம் வசூல்.. உயர்நீதிமன்றம் அறிவுரை!...
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு...
திருமணம் செய்ய கோவா சென்ற ஜோடி.. பெண்ணை கொன்ற காதலன்!
திருமணம் செய்ய கோவா சென்ற ஜோடி.. பெண்ணை கொன்ற காதலன்!...
தன்ஷ், அதர்வா, வைபவ்... யார் படத்தை முதலில் பாக்க போறீங்க?
தன்ஷ், அதர்வா, வைபவ்... யார் படத்தை முதலில் பாக்க போறீங்க?...
2025ல் அடுத்த 6 மாதங்கள் எப்படி இருக்கும்? - ஜோதிடர்கள் கணிப்பு!
2025ல் அடுத்த 6 மாதங்கள் எப்படி இருக்கும்? - ஜோதிடர்கள் கணிப்பு!...
ஏஐ வசதிகளுடன் அடோபியின் Firefly செயலி - அப்படி என்ன ஸ்பெஷல்?
ஏஐ வசதிகளுடன் அடோபியின் Firefly செயலி - அப்படி என்ன ஸ்பெஷல்?...
பச்சையாக முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா..?
பச்சையாக முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா..?...
SpiceJet விமானத்தில் கெட்டுப்போன உணவு கொடுத்ததாக பயணிகள் ஆத்திரம்
SpiceJet விமானத்தில் கெட்டுப்போன உணவு கொடுத்ததாக பயணிகள் ஆத்திரம்...
உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை இப்படி சுத்தம் செய்யுங்கள்!
உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை இப்படி சுத்தம் செய்யுங்கள்!...