Amit Shah : பாஜக நிர்வாகிகள் கூட்டம்.. இன்று மதுரை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
Home Minister Amit Shah Visit Madurai | தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஜூன் 07, 2025) மதுரையில் நடைபெற உள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்துரை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா
மதுரை, ஜூன் 07 : உள்துறை அமைச்சர் அமித்ஷா (Home Minister Amit Shah) இன்று (ஜூன் 07, 2025) மதுரை வருகிறார். காலை விமானம் மூலம் மதுரை வரும் அவர், மாலை நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) நிர்வாகிகள் கூட்டத்தில் பேச உள்ளார். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதனை இலக்காக கொண்டு பாரதிய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மதுரை வருகை அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பயணிக்கும் பாஜக
2019 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பாஜக கடும் தோல்வியை சந்தித்தது. அப்போது திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது திமுக அரசின் ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், 2026-ல் தமிழகத்திற்கு மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை இலக்காக கொண்டு அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும் என்று பாஜக தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதற்காக கட்சியில் பல்வேறு மாற்றங்களை பாஜக மேற்கொண்டுள்ளது. உடைந்த அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் இணைத்தது, மாநில தலைவரை மாற்றியது, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக மட்டுமன்றி திமுக, தவெக, நாதக என பல்முணை போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதுரை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
Madurai, Tamil Nadu: BJP State General Secretary Raama Sreenivasan says, “We are here to strategize our election campaign, and Honorable Home Minister Amit Shah’s visit to Madurai aims to boost our efforts in Tamil Nadu. We are confident that it will significantly strengthen our… pic.twitter.com/ORGxKEOCzQ
— IANS (@ians_india) June 6, 2025
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று (ஜூன் 07, 2025) மதுரை வருகிறார். விமான மூலம் காலை 8.30 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா, காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசன மேற்கொள்கிறார். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார். இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 15,000 பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.