வேளச்சேரி பக்கம் போறீங்களா? மின்சார ரயில்கள் ரத்து.. இந்த ரூட் தான் முக்கியம்!
Chennai EMU Train Cancelled : சென்னை மெரினா கடற்கரை ரயில் நிலையத்தில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை - வேளச்சேரி - ஆவடி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் 2025 மே 17ஆம் தேதி இரவு முதல் மே 18ஆம் தேதி காலை 8 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை மின்சார ரயில்கள்
சென்னை, மே 17 : சென்னையில் 2025 மே 17ஆம் தேதியான இன்று மின்சார ரயில்கள் (Chennai EMU Train Cancelled) ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக, கடற்கரை – வேளச்சேரி – ஆவடி (Chennai beach – Velachery Train) இடையே 10 மணி நேரத்திற்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. இந்த மின்சார ரயில்களில் புறநகரை இணைக்கக் கூடிய வகையில், இருப்பதால் மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் குறைந்த கட்டணத்திலும் சென்று வருகின்றனர். இதனால், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக அண்மையில் ஏசி மின்சார ரயில்களை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து
இப்படி பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த மின்சார ரயில் ஒருநாள் இல்லையென்றாலும் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். இருப்பினும், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது, சில ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், 2025 மே 17ஆம் தேதியான இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் 2025 மே 17ஆம் தேதியான இன்று இரவு 10 மணி முதல் 2025 மே 18ஆம் தேதியான நாளை காலை 8 மணி வரை 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, வேளச்சேரியிலிருந்து இரவு 9 மணி, 9.40 மணி, 10.20 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் ரயில்களும், கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
எந்த ரூட் தெரியுமா?
As part of ongoing Engineering works, Line Block/Signal Block is permitted in #Chennai Central – #Arakkonam section at Chennai Beach Yard for Erection of New Foot over Bridge (FOB) gangway girders at #ChennaiBeachYard on 17th & 18th May 2025.
Passengers, kindly take note. pic.twitter.com/1BlzSbWaZX
— DRM Chennai (@DrmChennai) May 16, 2025
மே 18 அன்று காலை 5 மணி, 5:30 மணி, 6 மணி, 6:30 மணி, 7:05 மணி, 7.25 மணி மற்றும் 7:45 மணிக்கு கடற்கரையிலிருந்து புறப்படும் வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 18 அன்று காலை 5, 5:30 மணி, 6 மணி, 6:15 மணி, 6:35 மணி மற்றும் 6:55 மணிக்கு வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்கு இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.