Srikanth, Krishna Drug Case: போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்.. நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!
Chennai Drug Case Update: சென்னையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்திருந்தனர். நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்கள் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் மேலும் விசாரணை தொடரும். கோகைன் கண்டுபிடிப்பு, மருத்துவ பரிசோதனை முடிவுகள் ஆகியவை முக்கிய சான்றுகளாக உள்ளன.

சென்னை, ஜூலை 8: சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதைப்பொருள் (Drug Case) வழக்கில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்களான ஸ்ரீகாந்த் (Srikanth) மற்றும் கிருஷ்ணா சென்னையில் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், இருவரும் தங்களை விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) ஜாமீன் கோரி மனு செய்திருந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று அதாவது 2025 ஜூலை 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்தநிலையில் சமீபத்திய தகவலின்படி, போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா என 2 நடிகர்களுக்கும் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சோதனையில் கோகைன் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி நடைபெற்றது. இதன்போது, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ் சினிமா நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜாமூன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். தடைசெய்யப்பட்ட பொருட்களான கோகைனை ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு விற்றதாக கூறி, முன்னாள் அதிமுகவின் ஐடி பிரிவைச் சேர்ந்த பிரசாத் கைது செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையின் பேரில் மருத்துவ சோதனைக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளிகளும் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.




தொடரும் விசாரணை:
ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!#Srikanth #krishna #highcourt #kalakkalcinema #TNPolice #MadrasHC pic.twitter.com/flNinYx80P
— Kalakkal Cinema (@kalakkalcinema) July 8, 2025
போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதஒ போலீசார் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு (ANIU) நடிகர் ஸ்ரீகாந்திடன் விசாரித்தது. மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்த் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். முன்னாள் அதிமுக நிர்வாகியிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கோகைனை ரூ.12,000க்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா நிபந்தை ஜாமீன் வழங்கப்பட்டாலும், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னை காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை இந்த வழக்கில் மேலும் தொடர்புகளைக் கண்டறிய முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.