வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!
Bay of Bengal Low Pressure | தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, மே 23 : மே 27, 2025 அன்று வங்கக்கடலில் (Bay of Bengal) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே 27, 2025 அன்று தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே மே 25, 2025 அன்று தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மே மாதம் தொடங்கியது முதலில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சற்று குளிர்ச்சியான சுழல் நிலவுகிறது. தமிழகத்தில் வழக்கமாக மே 25 ஆம் தேதிக்கு மேல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், 2025-ல் மே 25, 2025 அன்று முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் என்பதால், மதியம் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா, வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக கூடும் என்றும் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து வலுவடைய கூடும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.