Jana Nayagan: ‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்க்கு அம்மா ரோலில் இந்த நடிகையா?
Jana Nayagan Movie Update : தளபதி விஜய்யின் நடிப்பில் இறுதியாக உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்த படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகை ஒருவர் விஜய்யின் அம்மா ரோலில் நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது, அது யார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay ) நடிப்பில் கடைசியாக வெளியான படம் கோட் (GOAT). இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் நிலையில், இந்த படத்தில் விஜய்யின் அம்மா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகை வேறு யாருமில்லை. நடிகை ரேவதிதான் (Revathi). இந்த தகவலானது இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் நடித்து தமிழன் படத்தின் அவரது அக்காவாக ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் குறித்துப் படக்குழு எந்தவித அறிவிப்புகளும் வெளியிடவில்லை. விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த ஜன நாயகன் படம்.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
பொங்கலுக்கு வருகிறோம்!
ಸಂಕ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತಿದ್ದೇವೆ!
సంక్రాంతికి వస్తున్నాం!
पोंगल पर आ रहे हैं!
പൊങ്കലിന് വരുന്നു!
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju… pic.twitter.com/WIYOpyyQlN
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
நடிகர் விஜய்யின் இந்த படத்தில், நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படத்தின் குட் டச் பேட் டச் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த காட்சிகளை ஜன நாயகன் படக்குழு ரூ.23 கோடிகளைக் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீப காலமாக நடிகர் விஜய்யின் நடித்து வரும் ஜன நாயகன் படமானது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டுவரும் நிலையில், இதைப் படக்குழு உறுதிசெய்யவில்லை. இந்த படத்தின் தொடர்பான அறிவிப்புகள் இறுதியாகக் கடந்த 2025 மார்ச் மாதத்தில் வெளியாகியிருந்தது.
அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த படத்தின் டீசர் அல்லது முதல் பாடல் குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் , பூஜா ஹெக்டே, பாபி தியோல், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் முழுமையாக உருவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2026, ஜனவரி மாதம் 9ம் தேதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.