Suriya 46: சூர்யா – வெங்கி அட்லூரி படம்.. அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!
Suriyas 46th Movie Cast List : தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் வெங்கி அட்லூரி. இவரின் இயக்கத்தில் லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து, சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் சூர்யா46. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்த நடிகர்களின் பட்டியல் குறித்துப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாகக் கலக்கி வருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூல் பெற்று வெற்றிபெற்ற திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை தொடர்ந்து சூர்யா நடித்துவரும் படம் சூர்யா 45. இதை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி (RJ Balaji) இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா46 படத்தில் இணைந்தார்.
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை கடந்த 2025, மே 19ம் தேதியில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடிக்கவுள்ளார். இவரைத் தொடர்ந்து இந்த படத்தில் வேறு எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த நடிகர்கள் :
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ள நிலையில், அவரை தொடர்ந்து இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் நடிக்கவுள்ளதாகப் படக்குழு பதிவில் கூறியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மேலும் சில நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து இதைப் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 46 படக்குழு வெளியிட்ட பதிவு :
Here’s a sneak peek into the Pooja Ceremony of the much-awaited #Suriya46 🤩🔥
🎬 Shoot begins at the end of May!
🎟️ Catch it in theaters Summer 2026!@Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NimishRavi… pic.twitter.com/Evd4bam1TB— Sithara Entertainments (@SitharaEnts) May 22, 2025
இயக்குநர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் 46வது படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசைமையாக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சூர்யாவின் நடிப்பில் மிகவும் அதிக எதிர்பார்ப்புகளுடன் உருவாகிவரும் படமாக அமைந்துள்ளது.
இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகிவருகிறது. இந்த படத்தை சித்ரா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகர் சூர்யாவின் இந்த 46வது படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.