O. Panneerselvam: பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லையா..? ஓ.பன்னீர்செல்வம் தெளிவான விளக்கம்!

AIADMK-BJP Alliance 2025: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரிந்த அதிமுகவும் பாஜகவும் 2025 சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவை எடுத்ததாகவும், அதிமுக தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியைத் தவிர்த்து, மற்ற NDA தலைவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

O. Panneerselvam: பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லையா..? ஓ.பன்னீர்செல்வம் தெளிவான விளக்கம்!

பாஜக கூட்டணி குறித்து ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்

Published: 

15 May 2025 18:52 PM

சென்னை, மே 15: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் (All India Anna Dravida Munnetra Kazhagam), பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்தது. இருப்பினும், இந்த கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கூட்டணியாக அமையவில்லை. தொடர்ந்து, இந்த இரண்டு கட்சிகளும் சிறு சிறு பிரச்சனைகள் காரணமாக 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணியை முறித்துகொண்டது. அப்போது, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் (O. Panneerselvam) அணியும், டிடிவி தினகரன் (T. T. V. Dhinakaran)  தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்து தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியும் பெரியளவில் வெற்றிகளை பெறவில்லை. இந்தநிலையில், வருகின்ற 2025 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமித் ஷா முன்னிலையில் இணைந்தது.

இதனால், ஏற்கனவே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓபிஎஸ் அணி மற்றும் அமுமுக கட்சி வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் அணி உள்ளதா இல்லையா என்பதை ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியுள்ளார்.

பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணியா..?

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தபோது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருந்தோம். இப்போது அதே கூட்டணியில்தான் உள்ளோம். இதை யார் விரும்புகிறார்களோ இல்லையோ எங்கள் அணியின் நிலைப்பாடு இதுமட்டும்தான். எங்களின் மாவட்ட நிர்வாகிகளை ஆலோசித்த பின்புதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

அடுத்ததாக மாவட்டம் மாவட்டமாக அதிமுக தொண்டர்களை சந்திக்க இருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த முறை சென்னை வந்தபோது, எங்களை அழைக்காதது சிறிய வருத்தம்தான். அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவை உச்சாணி கொம்பில் வைத்துவிட்டு சென்றார்கள். இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே, பிரிந்திருக்கும் அதிகவினர் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் அணியினரின் நிலைப்பாடு.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்தே எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதே நான் வாழ்த்து தெரிவித்தேன். அவரின் எதிர்கால அரசியலை பொறுத்தேன் அவர் எந்த திசையில் செல்கிறார் என்பது தெரிய வரும். அரசு நிர்வாகத்தில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. ”என்று தெரிவித்தார்.