48 வகையான உணவுகள்.. திமுக பொதுக்குழுவில் தடபுடலாக ரெடியான விருந்து.. லிஸ்ட் இதோ!
DMK General council meet madurai : மதுரை மாவட்டம் உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக 24 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்குழுவில் 5,000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

மதுரை, ஜூன் 01 : மதுரை மாவட்டத்தில் 2025 ஜூன் 1ஆம் தேதியான இன்று திராவிட முன்னேற்ற கழக (திமுக) பொதுக் குழு (DMK General Council Meet) கூட்டம் நடைபெற உள்ளது. காலை 9 மணியளவில் பொதுக் குழு கூட்டம் தொடங்க உள்ளது. மதுரை உத்தங்குடியில் சுமார 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திடலில் பிரம்மாணடாக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அரங்கில் ஒரே நேரத்தில் 1,000 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதுல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்க, மாநில நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் என 5000 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் பணியை தீவரப்படுத்துவது போன்றறை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தடபுடலாக ரெடியான விருந்து
இதற்கிடையில், பொதுக் குழுவில் கலந்து கொள்பவர்களுக்கு தடபுலடாக விருதுகள் அளிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் 2025 மே மே 30ஆம் தேதியான நேற்று முதலே தொடங்கியது. இன்று பிரமாண்ட கூடத்தில் சமைக்கப்பட்டு வருகிறது. இந்த பொதுக் குழுவில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் என 48 வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, சைவத்தில் குல்கந்து பர்பி, கதம்ப பொறியல், உருளைக்கிழங்கு கறி, சௌசௌ கூட்டு, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் ஃப்ரை, வெண்டைக்காய் ஃப்ரை, பருப்பு வடை, சப்பாத்தி, சிப்பி காளான் குழப்பு, சாம்பார், வெள்ளை சாதம், பருப்புபொடி, நெய், எண்ணெய் கத்திரிக்காய் குழப்பு, தக்காளி ரசம், சேமியா பால் பாயாசம், அப்பளம், தயிர், இஞ்சி புளி ஊறுகாய் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
அசைவத்தை பொறுத்தவரை பன் அல்வா, மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் காடி சாப்ஸ்இ மட்டன் உப்புக் கறி, மட்டன் கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சீரமீன் வறுவல், நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, எலும்பு தால்சா, சாதம், அயிரை மீன் குழம்பு, ரசம், மோர், ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா, பீடா, வாழைப்பழம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
திமுக பொதுக் குழு
2026 – பொதுத்தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறப்போகும் தி.மு.கழகத்தின் பொதுக்குழு, கூடல் மாநகரில் நாளை கூடுகிறது!#திமுகபொதுக்குழு2025 @arivalayam pic.twitter.com/MnfTHSI7N6
— DMK Youth Wing (@dmk_youthwing) May 31, 2025
மதுரை மாவட்டம் மூன்றாவது முறையாக திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. கடந்த 1977ஆம் ஆண்டு செல்லூர் பகுதியில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அடுத்ததாக, 1978ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது, மதுரையில் மூன்றாவது முறையாக உத்தங்குடியில் பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.