Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலையிலேயே அதிர்ச்சி.. கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி.. மதுரையில் சோகம்!

Madurai Heavy Rain : மதுரை வலையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பாட்டி, பேரன், மற்றொரு பெண் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது.

காலையிலேயே அதிர்ச்சி.. கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி.. மதுரையில் சோகம்!
மாதிரிப்படம்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 May 2025 08:31 AM

மதுரை, மே 20 : மதுரை வலையங்குளத்தில் மழை காரணமாக (Madurai heavy rain) வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளது (Madurai Wall Collapse) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் பாட்டி, பேரன், மற்றொரு பெண் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.  சுவர் இடிந்து விழுந்து அம்மா பிள்ளை (65), பேரன் வீரமணி (10), வெங்கட்டி என்ற 55 வயது பெண் உயிரிழந்துள்ளனர்.  கனமழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததை அறிந்த அக்கம்  பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு  தீயணைப்பு வீரர்களுக்கு வந்தனர். இதனை அடுத்து, இடிபாடுகளில் சிக்கிய மூன்று பேரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து  விபத்து

அங்கு சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மதுரை இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்த வருகிறது.  வெப்பம் தணிந்து பல்வேறு மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இதனால், மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக,  நீலகிரி,  கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை வெளுத்து வாங்கி வருகிறது.  இதில், மதுரையில் இரு நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதன்படி, மாட்டுத்தாவணி, உத்தங்குடி, ஒத்தக்கடை, கே.புதூர், தல்லாகுளம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

3 பேர் உயிரிழப்பு

இந்த நிலையில், மதுரையில்  அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, மதுரை மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கும் போது,  மின்வெட்டால் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது.  இதில், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து, மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அம்மா பிள்ளை (65), வெங்கட்டி (55), வீரமணி (10) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.  சம்பவ இடத்திற்கு மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் சூரி பேச்சு
வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் சூரி பேச்சு...
திருமண தடை நீக்கும் முருகன்.. வெற்றி வேலாயுத சுவாமி கோயில்!
திருமண தடை நீக்கும் முருகன்.. வெற்றி வேலாயுத சுவாமி கோயில்!...
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்த லப்பர் பந்து இயக்குநர்!
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்த லப்பர் பந்து இயக்குநர்!...
Accept All ? Reject All ? குக்கீஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!
Accept All ? Reject All ? குக்கீஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!...
பிளேஆஃப் பந்தயத்தில் மும்பையை முந்துமா டெல்லி? யாருக்கு வாய்ப்பு?
பிளேஆஃப் பந்தயத்தில் மும்பையை முந்துமா டெல்லி? யாருக்கு வாய்ப்பு?...
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?...
ரஜியினின் ஜெயிலர் 2 படத்தில் குவியும் மலையாள பிரபலங்கள்!
ரஜியினின் ஜெயிலர் 2 படத்தில் குவியும் மலையாள பிரபலங்கள்!...
சமையலில் தொடர்ந்து சொதப்பலா..? இதை செய்தால் சுவை இரட்டிப்பாகும்!
சமையலில் தொடர்ந்து சொதப்பலா..? இதை செய்தால் சுவை இரட்டிப்பாகும்!...
ஆட்டோகிராஃப் படத்தில் அந்த முன்னணி நடிகர் நடிப்பதாக இருந்தது...
ஆட்டோகிராஃப் படத்தில் அந்த முன்னணி நடிகர் நடிப்பதாக இருந்தது......
அன்று இலவசம்.. இன்று கோடியில் மதிப்பு.. பதஞ்சலி தந்த் காந்தி கதை!
அன்று இலவசம்.. இன்று கோடியில் மதிப்பு.. பதஞ்சலி தந்த் காந்தி கதை!...
SIP : தினமும் 100 ரூபாயில் முதலீடு செய்யலாம் - என்ன நன்மைகள்?
SIP : தினமும் 100 ரூபாயில் முதலீடு செய்யலாம் - என்ன நன்மைகள்?...