Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jailer 2: ரஜியினின் ‘ஜெயிலர் 2’ படத்தில் குவியும் மலையாள பிரபலங்கள்.. யார் தெரியுமா?

Jailer 2 Movie Starring Malayalam Celebrities : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கூலி படத்தைத் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் நிலையில், மோகன்லாலை தொடர்ந்து பல பிரபலங்கள் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பிரபலங்களைப் பற்றி பார்க்கலாம்.

Jailer 2: ரஜியினின் ‘ஜெயிலர் 2’ படத்தில் குவியும் மலையாள பிரபலங்கள்.. யார் தெரியுமா?
ரஜியினின் ஜெயிலர் 2 Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 20 May 2025 15:46 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கூலி (Coolie). இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். ரஜினியின் இந்த படத்தில் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். கூலி படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமானது பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. நடிகர் ரஜினியின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக, 2 ஆம் பாகம் உருவாகிவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் 1 படமானது மிகவும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று, பான் இந்தியா அளவிற்கு சுமார் ரூ.650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து இந்த ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவிப்புகள் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2025, மார்ச் மத்தில் தொடங்கியது. இந்நிலையில் ஜெயிலர் முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் சிவராஜ் குமார் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து மலையாள பிரபலங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் மோகன்லால் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடுவை தொடர்ந்து, நடிகர்கள் வினீத் தட்டில் டேவிட், சுனில் சுகதா, கோட்டயம் நசீர், அன்ன ரேஷ்மா ராஜன், சுஜித் சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

 

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாள சினிமாவில் இருந்து நடிகர் மோகன்லால் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதைத் தொடர்ந்து வீர தீர சூரன் 2 படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் இணைந்து நடித்து வருகிறார். இவர்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 5 மலையாள நடிகர்கள் இணைந்துள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவர் சமீபகாலமாக நடிகர் ரஜினிகாந்த்தின் படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.மேலும் ஜெயிலர் 2 படத்திலும் இசையமைத்து வருகிறார். இந்த ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த படம் வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடுவதற்குப் படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?...
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!...
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!...
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!...
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?...
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!...
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக..
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக.....
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?...
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!...
கும்பத்தில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு நல்ல காலம்!
கும்பத்தில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு நல்ல காலம்!...