Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரசு பள்ளி ஊழியர்களுக்கு வந்த முக்கிய மாற்றம்.. பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Revised Government School Staff Working Hours | அரசு பள்ளி ஊழியர்களுக்கான பணி நேரத்தில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக அரசு பள்ளி ஊழியர்களுக்கான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஊழியர்களுக்கு வந்த முக்கிய மாற்றம்.. பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 20 May 2025 07:43 AM

சென்னை, மே 20 : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் (Government Schools) மற்றும் பள்ளி கல்வித்துறை (Education Department) அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) உத்தரவிட்டுள்ளது. தற்போது பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை இருந்த நிலையில், தற்போது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை ஊழியர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள பணி நேரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலகங்கள்

தமிழகத்தில் ஏராளமான அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதே போல இந்த அரசு பள்ளிகளை செயல்படுத்தும் பள்ளிக்கல்வித்துறையும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தான் அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை ஊழியர்களுக்கு அவர்களது பணி நேரத்தில் மாற்றம் செய்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கான உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. முன்னதாக இவர்களது பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இருந்தது. ஆனால், 2013 ஆம் ஆண்டு மே மாதம் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்த பணி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலகங்களின் பணியாற்று ஊழியர்களுக்கான பணி நேரம் மீண்டும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – பள்ளி கல்வித்துறை

பணி நேரத்திற்கு பிறகு வழக்கமான பணிகள் இல்லாமல் ஏதேனும் அவசர பணிகள் இருக்கும்போது மட்டும் கூதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களின்போது முறை பணிக்கு வரிசையாக பட்டியலிட்டு அதன்படி பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளேஆஃப் பந்தயத்தில் மும்பையை முந்துமா டெல்லி? யாருக்கு வாய்ப்பு?
பிளேஆஃப் பந்தயத்தில் மும்பையை முந்துமா டெல்லி? யாருக்கு வாய்ப்பு?...
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?
விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?...
ரஜியினின் ஜெயிலர் 2 படத்தில் குவியும் மலையாள பிரபலங்கள்!
ரஜியினின் ஜெயிலர் 2 படத்தில் குவியும் மலையாள பிரபலங்கள்!...
சமையலில் தொடர்ந்து சொதப்பலா..? இதை செய்தால் சுவை இரட்டிப்பாகும்!
சமையலில் தொடர்ந்து சொதப்பலா..? இதை செய்தால் சுவை இரட்டிப்பாகும்!...
ஆட்டோகிராஃப் படத்தில் அந்த முன்னணி நடிகர் நடிப்பதாக இருந்தது...
ஆட்டோகிராஃப் படத்தில் அந்த முன்னணி நடிகர் நடிப்பதாக இருந்தது......
அன்று இலவசம்.. இன்று கோடியில் மதிப்பு.. பதஞ்சலி தந்த் காந்தி கதை!
அன்று இலவசம்.. இன்று கோடியில் மதிப்பு.. பதஞ்சலி தந்த் காந்தி கதை!...
SIP : தினமும் 100 ரூபாயில் முதலீடு செய்யலாம் - என்ன நன்மைகள்?
SIP : தினமும் 100 ரூபாயில் முதலீடு செய்யலாம் - என்ன நன்மைகள்?...
சீரடியில் சாய்பாபா நிகழ்த்திய அதிசயம்.. போஸ் வெங்கட் அனுபவங்கள்!
சீரடியில் சாய்பாபா நிகழ்த்திய அதிசயம்.. போஸ் வெங்கட் அனுபவங்கள்!...
நாடகம் போடுபவர்களுக்கே இது காலம்... ஆர்த்தி ரவி
நாடகம் போடுபவர்களுக்கே இது காலம்... ஆர்த்தி ரவி...
சென்னை அருகே லாரி திருட்டு.. 10 கி.மீ தொங்கியபடி போலீஸ் சேஸிங்!
சென்னை அருகே லாரி திருட்டு.. 10 கி.மீ தொங்கியபடி போலீஸ் சேஸிங்!...
வீட்டில் சிவப்பு நிற பூச்செடி இருக்கா? - உடனே இதைப் பண்ணுங்க!
வீட்டில் சிவப்பு நிற பூச்செடி இருக்கா? - உடனே இதைப் பண்ணுங்க!...