2 வயது பெண் குழந்தை தலை துண்டித்து கொலை.. 24 வயது உறவினர் வெறிச்செயல்!
2 Year Old Kid Brutally Killed | ராமநாதபுரத்தில் 2 வயது குழந்தை தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 24 வயது இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம், மே 23 : ராமநாதபுரத்தில் 2 வயது பெண் குழந்தை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையை செய்த குழந்தையின் உறவினரான சஞ்சய் என்ற இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சஞ்சய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், சிறுமியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2 வயது குழந்தையை தலையை துண்டித்து கொலை செய்த இளைஞர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் வடக்கு ரத விதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டெய்ஸி. இவர்கள் இருவருக்கும் இரண்டு வயதில் லெமோரியா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (மே 22, 2025) மாலை 4.30 மணிக்கு லெமோரியாவை அவரது உறவினரான சஞ்சய் என்ற 24 வயது இளைஞர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு துணி துவைக்கும் கல்லில் சிறுமியை படுக்க வைத்து அவரது கழுத்தை அறுத்த தலையை தணியாக துண்டித்து எடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இளைஞரின் கொடூர செயலை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனால் பயந்துப்போன அந்த இளைஞர் சிறுமியின் தலையையும் கத்தியையும் அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு சடலத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுன் வரும் போலீசார்
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சிறுமியின் தலையையும் கத்தியையும் மீட்டுள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், கொலை செய்த சஞ்சையை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள போலீசார், சஞ்சை மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என அப்பகுதியினர் கூறுகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் 2 வயது குழந்தையை அவரது உறவினரே தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.