பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த சிறுமி.. மாடியில் இருந்து கீழே குதித்தால் அதிர்ச்சி!
16 years old girl jumped off from terrace in Kaynakumari | கன்னியாகுமரியை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அதிக நேரம் நண்பர்களுடன் செல்போனில் உரையாடியதற்காக பெற்றோர் திட்டிய நிலையில், அவர் இந்த அபாயகரமான முடிவை எடுத்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
கன்னியாகுமரி, மே 17 : கன்னியாகுமரியில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த 16 வயது சிறுமி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11 ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி எப்போது நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், பெற்றோர் அதனை கண்டித்துள்ளனர். இதனால் அந்த சிறுமி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த சிறுமி விபரீத முடிவு – அதிர்ச்சி சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கோடு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று (மே 16, 2025) வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு செல்ல தயாராக உள்ளார். இந்த நிலையில் மாணவி எப்போதும் செல்போனில் தனது நண்பர்களுடன் பல மணி நேரம்உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இது குறித்த பலமுறை பெற்றோர் சிறுமியிடம் கூறியும் அவர் தொடர்ந்து நண்பர்களுடன் செல்போனில் மணிக்கணக்காக பேசி வந்துள்ளார். அந்த வகையில், நேற்று (மே 16, 2025) மாணவி தனது நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார். இந்த நிலையில் ஆத்திரமடைந்த பெற்றோர் செல்போனில் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசுவது குறித்து அவரை கண்டித்து உள்ளனர்.
பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவி
இதனால் மனம் உடைந்த மாணவி திடீரென தனது வீட்டில் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். மாடியில் இருந்து குளித்ததன் காரணமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் இந்த செயலை கண்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு உடனடியாக ருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த மாணவி, வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.