திருவண்ணாமலையில் சோகம்: சேலையில் சிக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி

Tragedy in Tiruvannamalai: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ராட்டினமங்கலத்தில் 11 வயது பாக்கியா என்ற சிறுமி, வீட்டில் சேலையைக்கட்டி ஊஞ்சலாடியபோது, சேலை கழுத்தில் இறுக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் சோகம்: சேலையில் சிக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி

சேலையில் சிக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி

Published: 

16 May 2025 09:50 AM

திருவண்ணாமலை மே 16: திருவண்ணாமலை மாவட்டம் (Tiruvannamalai District) ராட்டினமங்கலத்தை சேர்ந்த 11 வயது பாக்கியா, வீட்டில் சேலையை கட்டி ஊஞ்சலில் விளையாடியபோது சேலை கழுத்தில் இறுக்கி மூச்சுத் திணறி மயங்கினார். உடனே அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு (Arani Government Hospital) கொண்டு சென்ற போதும், உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த பாக்கியாவின் மரணம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெற்றோர் முருகன்-ரேகா தம்பதியருக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலையில் சிக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி – திருவண்ணாமலையில் சோக சம்பவம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியில் இரங்கலை ஏற்படுத்திய ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஈ.பி.நகர் பகுதியில் வசிக்கும் முருகன் மற்றும் அவரது மனைவி ரேகா தம்பதியரின் 11 வயது மகள் பாக்கியா, ஆரணியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பில் படித்து வந்தார்.

2025 மே 14 ஆம் தேதி நேற்று முன்தினம் மாலை, வீட்டில் சேலையை பயன்படுத்தி ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த பாக்கியா, தற்செயலாக கழுத்தில் சேலை இறுக்கி மூச்சுத் திணறி மயங்கி விழுந்தார். இது கண்டு பதற்றம் அடைந்த பெற்றோர் உடனே அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சைக்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ராட்டினமங்கலத்தை சேர்ந்த 11 வயது பாக்கியா, வீட்டில் சேலையை கட்டி ஊஞ்சலில் விளையாடியபோது சேலை கழுத்தில் இறுக்கி மூச்சுத் திணறி மயங்கினார். இந்த துயர சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி சேலையில் சிக்கி உயிரிழந்த செய்தி அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய சோக சம்பவம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகள் ஹேமப்பிரியா (14), உள்ளூர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 12th ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, தவறுதலாக சேலை கழுத்தில் இறுக்கி மயக்கமடைந்தார்.

இதைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே ஹேமப்பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.