AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: இந்தியா டி20 தோல்விக்கு பேட்டிங்கே பொறுப்பு.. விளாசிய சுனில் கவாஸ்கர்..!

Gavaskar Accusations: கடந்த அக்டோபர் 14 அன்று ஹைதராபாத்தில் நடந்த டி20 போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது. இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு பேட்டிங்கே முக்கிய காரணம் என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சாடினார். பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்று ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்றும், டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள் போல விளையாட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

IND vs WI: இந்தியா டி20 தோல்விக்கு பேட்டிங்கே பொறுப்பு.. விளாசிய சுனில் கவாஸ்கர்..!
சுனில் கவாஸ்கர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Oct 2026 21:12 PM IST

கடந்த 2026 அக்டோபர் 14ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணியால் 223 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, இந்திய அணியின் (Indian Cricket Team) பேட்டிங் குறித்து ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், இந்திய அணி தனது சேஸிங் முறைகளை மேம்படுத்த வேண்டும் இந்தியா கடந்த இரண்டு தொடர்ச்சியான டி20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. அப்படியான சூழ்நிலையில் சாம்பியன்களைப் போல விளையாட வேண்டும் எனவும் கூறினார்.

ALSO READ: காயத்தால் அவதி! அர்ஷ்தீப்க்கு பவுன்சர் ஏன்..? ஷமர் ஜோசபை விளாசிய கவாஸ்கர்!

பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்க வேண்டும்..


இந்திய அணியின் தோல்வி குறித்து ஜியோஸ்டாரில் பேசிய சுனில் கவாஸ்கர், “இந்திய அணி முதலில் தனது சேஸிங் முறைகளை மேம்படுத்த வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்காவிட்டால், இந்திய அணி வெற்றி பெறாது. தொடர்ச்சியாக இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரு அணி ஆதிக்கம் செலுத்த வேண்டிய விதத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும், ஆனால் இந்தப் போட்டியில் அதன் சுவடு கூட இல்லை.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சுனில் கவாஸ்கர், “சஞ்சு சாம்சன் தனது 56 ரன்கள் இன்னிங்ஸ் மூலம் இந்திய அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தை அளித்தார். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தவறினர். அபிஷேக் ஷர்மா ஒரு மோசமான இன்னிங்ஸை விளையாடினார், இது அவரது திறமைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ள முடியாதது. இஷான் கிஷனும் கீமோ பாலின் வலையில் முழுமையாகச் சிக்கினார். ஷ்ரேயாஸ் ஐயரால் தனது ஆட்ட வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

ALSO READ: பவுலிங் சொதப்பல்.. அவங்கதான் காரணம் – தோல்விக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் கொந்தளிப்பு

பந்துவீச்சு மோசமாக இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்தப் பந்துவீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் அல்ல. அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்குப் புதியவர்கள், இனி வரும் காலங்களில் கற்றுக்கொள்வார்கள்.” என்றார்.

Follow Us