AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மும்பையை வீழ்த்திய கொல்கத்தா.. பிளே ஆஃப் சென்றதா ரஹானே படை..?

KKR vs MI Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தாவில் ஈடன் கார்ட்ன்ஸ் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. 

IPL 2026: மும்பையை வீழ்த்திய கொல்கத்தா.. பிளே ஆஃப் சென்றதா ரஹானே படை..?
Kkr Win Mi
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 21 May 2026 00:32 AM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தாவில் ஈடன் கார்ட்ன்ஸ் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 18.5 ஓவர்களில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. இது, கடந்த 7 போட்டிகளில் கேகேஆர் பெற்ற ஆறாவது வெற்றியாகும். இதன் மூலம், பிளேஆஃப் சுற்றுக்கான தங்களது நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டது. மனிஷ் பாண்டே மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோரின் போராட்டமான ஆட்டத்தால் கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெற்றது. சுனில் நரைனின் சிறப்புமிக்க பந்துவீச்சும் இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது.

ALSO READ: வைபவ் சூர்யவன்ஷியின் ’A’ கொண்டாட்டம்.. இந்த சிறப்பு எழுத்துக்குள் இவ்வளவு ரகசியமா?

போட்டியில் நடந்தது என்ன..?

ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 147 ரன்கள் எடுத்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில், மும்பையின் இன்னிங்ஸ் தடைபட்டது. ரோஹித் சர்மா, ரியான் ரிகல்டன் மற்றும் சூர்யகுமார் யாதவ் சொதப்பிய பிறகு, கார்பின் போஷ் (32), ஹர்திக் பாண்டியா (26) மற்றும் திலக் வர்மா (20) ஆகியோரின் குறுகிய நேர இன்னிங்ஸ் உதவியால் மும்பை அணி 147 ரன்களை எட்டியது.

148 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. முந்தைய போட்டியில் 93 ரன்கள் எடுத்திருந்த ஃபின் ஆலன், இந்தப் போட்டியில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அஜிங்க்யா ரஹானேவும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 25 கோடி ரூபாய் மதிப்புள்ள வீரரான கேமரூன் கிரீன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும், பேட்டிங்கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.  கேகேஆர் அணி குறுகிய நேரத்தில் 54 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பிறகு, மனிஷ் பாண்டே மற்றும் ரோவ்மன் பவல் இணைந்து 64 ரன்கள் கொண்ட ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, இன்னிங்ஸை நிலைப்படுத்தினர். பாண்டே 45 ரன்களும், பவல் 40 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி 19வது ஓவரில் இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது. இந்தப் போட்டியில் சுனில் நரைன் தனது நான்கு ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில், நரைன் தனது நான்கு ஓவர் ஸ்பெல்லில் 6 அல்லது அதற்கும் குறைவான எகானமி ரேட்டில் ரன்களை விட்டுக்கொடுப்பது இது 80வது முறையாகும்.

ALSO READ: தோனிக்குப் பிறகு கேப்டன் பதவி எளிதானது அல்ல.. ருதுராஜ் குறித்து பேசிய ஃபிளேமிங்!

13 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளதால் கொல்கத்தாவின் பிளேஆஃப் வாய்ப்புகள் உயிர்ப்புடன் உள்ளன. மேலும், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கொல்கத்தாவின் நிகர ரன் விகிதமும் நேர்மறையாக மாறியுள்ளது, இது பஞ்சாப் கிங்ஸுக்கான சிரமங்களை அதிகரித்து வருகிறது.

Follow Us