IPL 2025 Resumes: ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் சந்தேகம்.. யார் யார் பிளே ஆஃப்களில் விளையாடுகிறார்கள்..? விவரம் இதோ!

IPL 2025 Foreign Player Returns: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தால் நிறுத்தப்பட்ட IPL 2025, சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் மே 17 முதல் மீண்டும் தொடங்குகிறது. பல வெளிநாட்டு வீரர்கள் திரும்பும் நிலையில், சிலர் சர்வதேச போட்டிகள் காரணமாக திரும்ப மறுக்கின்றனர். குஜராத், கொல்கத்தா, ஹைதராபாத், பஞ்சாப், பெங்களூரு, டெல்லி, மும்பை அணிகளின் வீரர்களின் திரும்புதல் மற்றும் பிளே-ஆஃப் தகுதி குறித்த விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

IPL 2025 Resumes: ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் சந்தேகம்.. யார் யார் பிளே ஆஃப்களில் விளையாடுகிறார்கள்..? விவரம் இதோ!

வெளிநாட்டு வீரர்கள்

Published: 

14 May 2025 11:46 AM

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை (India Pakistan Tensions) அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது (IPL 2025) சீசனானது பாதியில் நிறுத்தப்பட்டது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 2025 மே 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளன. சண்டை காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடங்கவுள்ளதால் பல வீரர்கள் போட்டிக்காக இந்தியா திரும்புகின்றனர். அதே நேரத்தில் பல வீரர்கள் சர்வதேச போட்டிகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக திரும்ப வர மறுக்கின்றனர். இதனால் கிட்டத்தட்ட எல்லா அணிகளும் பாதிக்கப்படும். இதனால், பிளே ஆஃப் சுற்றுகளில் பல அணிகளுக்கும் சிக்கல்களும் உண்டாகலாம். இந்தநிலையில், எந்த வீரர்கள் ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாட இருக்கிறார்கள் என்ற பட்டியலை இங்கே தெரிந்து கொள்வோம்.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி இத்தகைய வெற்றியை பெறுவதற்கு வெளிநாட்டு வீரர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களான ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் இந்தியாவுக்குத் திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை கருத்தில்கொண்டு தனது வீரர்களை வருகின்ற 2025 மே 26ம் தேதிக்கு முன்பு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அதேநேரத்தில், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடலாம். குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள மற்ற வெளிநாட்டு வீரர்களில் ரஷித் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், கரீம் ஜனத் ஆகியோர் தொடர்ந்து விளையாட இருக்கின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஐபிஎல் 2025 சீசனில் மீதமுள்ள போட்டிகள் தொடங்கும் முதல் நாளான வருகின்ற 2025 மே 17ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. இது கொல்கத்தா அணிக்கு செய் அல்லது செத்து மடி போட்டியாகும். இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தோற்றால் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறும். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், ரோவ்மன் பவல் மற்றும் அணியின் மெண்டார் டுவைன் பிராவோ ஆகியோர் துபாயில் உள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் தனது நாடான ஆப்கானிஸ்தானுக்கும், தென்னாப்பிரிக்காவின் அன்ரிச் நார்ட்ஜே மாலத்தீவில் உள்ள நிலையில், மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களான ஹென்ரிச் கிளாசென், இஷான் மலிங்கா ஆகியோர் தொடர்ந்து விளையாட இருக்கின்றனர். அதேநேரத்தில், கமிந்து மெண்டிஸ் மற்றும் வியான் முல்டர் ஆகியோரின் வருகை குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி அணியில் இடம்பெற்றிருந்தாலும், ஐபிஎல் 2025ல் விளையாட இந்தியாவிற்கு திரும்புகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறிவிட்டது.

பஞ்சாப் கிங்ஸ்:

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிக அளவிலான ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பஞ்சாப் பிளேஆஃப் பந்தயத்தில் இன்னும் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களான சேவியர் பார்ட்லெட், அஸ்மதுல்லா உமர்சாய் மற்றும் மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோர் அணிக்குத் திரும்புகின்றனர். அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் பிராட் ஹாடின் மற்றும் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோர் இந்தியாவில் உள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஐபிஎல் 2025 இல் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், காயம் காரணமாகவும், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை கருத்தில்கொண்டும் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குத் திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேக்கப் பெதெல் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் விளையாட வாய்ப்பில்லை. தென்னாப்பிரிக்கா வீரர் லுங்கி நிகிடியும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பெற்றுள்ளார். எனவே, அவரும் வெளியேறலாம்.

டெல்லி கேபிடல்ஸ்:

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மீதமுள்ள போட்டிகள் முக்கியமானவை. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அந்த அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்குத் திரும்புவது கடினம். அதேபோல், டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் திரும்புவதும் டவுட்தான்.  மீதமுள்ள வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் விரையில் டெல்லி அணியி; இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா வீரர்களான ரியான் ரிகெல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணி வருகின்ற 2025 மே 26ம் தேதிக்குள் சேருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, இவர்கள் வருகின்ற 2025 மே 30 ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட இருக்கின்றனர். வில் ஜாக்ஸுக்கு சர்வதேச போட்டிகள் இருப்பதால், அவரும் விலகலாம்.

Related Stories
Neeraj Chopra: இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு சிறப்பு கௌரவம்..!
Ravindra Jadeja: 38 மாதங்கள்! 1152 நாட்கள்! ஆல்ரவுண்டர் பட்டியலில் தொடர்ந்து நம்பர் 1.. புதிய சாதனை படைத்த ஜடேஜா!
IPL 2025 Restart: குறுக்கே வரும் சர்வதேச போட்டிகள்! ஐபிஎல்லில் விளையாட முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு வீரர்கள்..!
Mohammed Shami Retirement: ஓய்வு என தீயாய் பரவிய செய்தி! முகமது ஷமி கொடுத்த நெருப்பான பதில்..!
India vs England Test Series 2025: ரோஹித், கோலிக்கு மாற்று வீரர்கள் யார்? இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி இதுதானாம்..!
IPL 2025 Resumes: ஐபிஎல் விளையாடுவது வீரர்களின் தனிப்பட்ட முடிவு.. பிசிசிஐ ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!