Aryavir Sehwag: ஸ்கொயர் கட்! கவர் டிரைவ்..! சேவாக்கை நினைவுக்கு கொண்டுவந்த ஆர்யவீர் சேவாக்!
Aryavir Sehwag - Virender Sehwag: வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிக்காக விளையாடும் ஆர்யவீர் சேவாக், வீரேந்தர் சேவாக்கை (Virender Sehwag) போலவே ஸ்கொயர் கட் மற்றும் கவர் டிரைவ் போன்ற தனது பிரத்யேக ஷாட்களை ஆடி வருகிறார். இது சேவாக் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளை தருகிறது.
முன்னாள் இந்திய அணியின் (Indian Cricket Team) தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக், தனது அச்சமற்ற மற்றும் அதிரடி பேட்டிங்கால் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 1999-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சேவாக், 3 வடிவங்களிலும் 374 போட்டிகளில் 17253 ரன்களையும் 38 சதங்களையும் அடித்துள்ளார். இப்போது அவரது மகன் ஆர்யவீர் சேவாக்கும், வீரேந்தர் சேவாக் போன்றே உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெல்லி பிரீமியர் லீக்கில் (DPL) வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிக்காக விளையாடும் ஆர்யவீர் சேவாக், வீரேந்தர் சேவாக்கை (Virender Sehwag) போலவே ஸ்கொயர் கட் மற்றும் கவர் டிரைவ் போன்ற தனது பிரத்யேக ஷாட்களை ஆடி வருகிறார். இது சேவாக் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளை தருகிறது. இதனை தொடர்ந்து, தந்தை மற்றும் மகனின் ஷாட்களை ஒப்பிட்டு டிபிஎல் நிர்வாகம் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ALSO READ: இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 போட்டிகள் எப்போது? முழு அட்டவணை இதோ!




சென்ட்ரல் டெல்லி பிரம்மாண்டமான ஸ்கோர்:
Virender Sehwag 🤝 Aaryavir Sehwag.
Like Father, Like Son… 🔥 pic.twitter.com/pNDY0db6KB
— CricketGully (@thecricketgully) August 21, 2026
டெல்லி பிரீமியர் லீக்கில் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணியும் சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் ஜூன் வெறும் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அதே நேரத்தில், சமர்த் சேத் வெறும் 14 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டதால், சென்ட்ரல் டெல்லி 232 ரன்கள் குவித்தது.
233 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணி, 4.5 ஓவர்களில் 71/2 என்ற ஸ்கோருடன் அதிரடியாகத் தொடங்கியது. ஆர்யவீர் சேவாக் ஆட்டமிழந்த பிறகு, கிரிஷ் யாதவ் 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்தார். கிரிஷ் யாதவ், தேஜஸ் பரோகாவால் ஆட்டமிழந்தபோதிலும், அங்கித் குமார் தனி ஒருவராகப் போராடி 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: ரூ. 70 கோடி நஷ்டம் டூ 500 கோடி லாபம்.. நியூசிலாந்துக்கு உதவும் இந்திய கிரிக்கெட்!
ஆர்யவீர் அசத்தல்:
ತಂದೆಗೆ ತಕ್ಕ ಮಗ!😎😍#VirenderSehwag #AryavirSehwag #StarSportsKannada pic.twitter.com/rN8d8X9Eay
— Star Sports Kannada (@StarSportsKan) August 24, 2026
அங்கித் குமார் பெவிலியன் திரும்பிய பிறகு, தேவைப்படும் ரன் விகிதம் அதிகரித்ததால் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணி பின்தங்கியது. இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியில் தோற்றபோதிலும், ஆர்யவீர் சேவாக்கின் பேட்டிங் பாணியும், சேவாக்கை நினைவூட்டும் ஷாட்களும் ரசிகர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சேவாக்கின் கடந்தகால ஷாட்களை ஆர்யவீரின் சமீபத்திய ஷாட்களுடன் ஒப்பிட்டு, அவர்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சேவாக் ரசிகர்கள் இந்த வீடியோக்களுக்கு லைக் செய்து, பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.