கும்பாபிஷேகம் பார்க்க திருச்செந்தூர் போறீங்களா? – முக்கிய அறிவிப்பு!
Tiruchendur Murugan Temple Kumbabhishekam: திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 ஜூலை 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. பக்தர்கள் வருகை அதிகரிப்பை கருதி, கோயிலுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பாதைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில் (Tiruchendur Murugan Temple) 2025 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆன்மிக ரீதியாக பல்வேறு முக்கிய சம்பவங்கள் நடந்த பகுதியாகும். இப்படியான பட்சத்தில் ஜூலை 7 ஆம் தேதி காலை 6.15 மணியில் இருந்து 6.50 மணிக்குள் ராஜகோபுரத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவிந்து வருவதால் திருச்செந்தூர் முழுக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கும்பாபிஷேகம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை காவல்துறையானது வெளியிட்டுள்ளது. அதன்படி நடந்து வரும் பக்தர்கள் எந்த வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளே செல்லும் வழி
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் பகத்சிங் பேருந்து நிலைய வாகன நிறுத்தம், மாட்டுத்தாவணி வாகன நிறுத்தம், டிபி ரோடு ஐடியல் பார்க்கிங் வாகனநிறுத்தம் ஆகிய இடத்திலிருந்து நடந்து வரும் பக்தர்கள் டிபி ரோடு, மணி ஐயர் ஹோட்டல் சந்திப்பு, வடக்கு ஆர்ச் சாலை வழியாக இடவசதிக்கு ஏற்ப போதுமான எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை கூட்டம் அதிகமானால் மாற்று பாதையில் கோயில் மற்றும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதே போல் திருநெல்வேலி ரோடு வழியாக வரும் பக்தர்கள் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்குத வீதி, கீழ ரத வீதி, அமலி நகர் சந்திப்பு, நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிக்கு செல்லலாம். தூத்துக்குடி ரோடு வழியாக வரும் பக்தர்கள் பகத்சிங் பேருந்து நிலையம் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதி வழியாக அமலி நகர் சந்திப்பு, நவாப்பழ சாலை வழியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லலாம்.
மேலும் ஜே.ஜே நகர் பார்கிங் மற்றும் டிபி ரோடு வழியாக வரும் பக்தர்கள் அனைவரும் தாலுகா அலுவலகம், திருச்செந்தூர் கோயில் காவல் நிலையம், மினி சிவமுருகன் லாட்ஜ், சன்னதி தெரு சுபா மெடிக்கல் ஜங்ஷன், புலியடி சந்தன மாரியம்மன் கோயில் சந்திப்பு, சபாபதி பிள்ளையார் கோயில் வழியாக சென்று நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிக்கு செல்லலாம்.
குலசேகரப்பட்டினம் ரோடு வழியாக வரும் பக்தர்கள் தெப்பக்குளம், முத்தாரம்மன் கோவில் தெரு சந்திப்பு, தெற்கு ரத வீதி, அமலி நகர் சந்திப்பு வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிக்கு வரலாம்.
கிழக்கு ரதவீதி மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து சன்னதி தெரு வழியாக பக்தர்கள் கோயில் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.
வெளியே செல்லும் வழி
கோயில் வடக்கு பகுதியில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் வடக்கு ஆர்ச் மணி ஐயர் ஹோட்டல் சந்திப்பு டிபி ரோடு வழியாக ஜெ ஜெ நகர் பார்க்கிங் அல்லது டிபி ரோடு மெயின் ஆர்ச் வழியாக தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி, குலசேகரபட்டினம் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.
அதேபோல் கோவில் மத்திய பகுதியிலுள்ள சன்னதி தெரு வழியாக வெளியே வரும் பக்தர்கள் கிழக்கு ரத வீதியில் உள்ள தேரடிக்கு வந்து வடக்கு ரத வீதி இரும்பு ஆர்ச் மெயின் ஆர்ச் வழியாக தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி பாதையை அடையலாம். அல்லது அமளி நகர் சந்திப்பு தெற்கு ரத வீதி தெப்பக்குளம் வழியாக குலசேகரப்பட்டினம் பாதையை அடையலாம்.
மேலும் கோயிலின் தெற்கு பகுதியான கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதிகளில் இருந்து வெளியே செல்லும் பக்தர்கள் நவாப் பல சாலை வழியாக அமளி நகர் சந்திப்பு வந்து கேட்கிறது வீதி முத்தாரம்மன் கோவில் சந்திப்பு தெப்பக்குளம் சென்று அங்கிருந்து பரமன் குறிச்சி ரோடு வழியாக குலசேகரம் பட்டினம் ரோடு செல்லலாம். அல்லது முத்தாரம்மன் கோவில் தெருவில் இருந்து மேற்கு ரத வீதி வடக்கு ரத வீதி இரும்பு ஆர்ச் சந்திப்பு வழியாக மெய்ன் ஆர்ச் வந்து தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி பாதையை அடையலாம்.