Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sani Peyarchi 2025: சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நடக்கப்போவது என்ன?

2025 மார்ச் 29 அன்று சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு இது விரைய சனியாகும். இதனால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப செலவுகள் அதிகரிக்கும் என பல விஷயங்கள் கணிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவல்களைக் காணலாம்.

Sani Peyarchi 2025: சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நடக்கப்போவது என்ன?
சனிப்பெயர்ச்சி - மேஷ ராசிக்கான பலன்கள் Image Source: X
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Apr 2025 16:12 PM

சனிப்பெயர்ச்சி (Sani Peyarchi) என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். இதனை நாம் சாதகம், பாதகம் என இரண்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். சனி பகவான் 2025, மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இத்தகைய சனிப்பெயர்ச்சியானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் வெவ்வெறு விதமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் ஏற்பட காரணமாகிறது என கணிக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தைப்  (Astrology) பொறுத்தமட்டில் 9 கிரகங்களில் சனி பகவான் தான் வலிமையானது. அதனால் தான் ஒரு ராசியில் அதிக நாட்கள் சஞ்சரிக்ககூடிய கிரகமாக உள்ளது. அப்படியான வகையில் மீன ராசிக்கு சனி பகவான் செல்லும் நிலையில் மேஷ ராசிக்கு என்னென்ன நிகழ்வுகள் இருக்கும் என்பது பற்றிக் காணலாம்.

மேஷ ராசியை பொருத்தவரை சனி பகவான் சனி பெயர்ச்சி தொடங்கியது முதல் இந்த ராசியில் விரைய வீட்டில் வந்து அமர்கிறார். இதனால் ஏழரை சனி தொடங்குகிறது என இந்த ராசிக்காரர்கள் பதற்றப்பட வேண்டாம். சனி பகவான் ராசிக்கு 12-வது இடத்தில் மறைவார். இதன் காரணமாக தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் விரைந்து நடைபெறும். மேலும் உங்களிடம் இருந்த பதற்றம் அவநம்பிக்கை யாவும் விட்டு விலகும். அதேபோல் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சுப செலவுகள் அதிகரிக்கும்

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். விரைய சனி செலவுகளை தருவார் என ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை யாவும் இந்த ராசிக்காரர்களுக்கு சுப செலவுகளாகவே அமையும். அதாவது கல்வி, திருமணம் உள்ளிட்ட அந்தக்காலக்கட்டத்துக்கு ஏற்ப ராசிக்காரர்களுக்கு செலவு அமையும்.

மேலும் கடன் பெற்றவர்கள் அதில் குறிப்பிட்ட தொகையை அடைக்கும் சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். தாய் வழி சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கும் மறைமுக எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். சனிபகவான் 2-ஆம் வீட்டை பார்ப்பதால் பணப்பழக்கம் திருப்திகரமாக இருக்கும். சில நேரங்களில் கைமாறாக கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டி இருக்கும் என்பதால் தயவுசெய்து யாரிடமும் வாக்கு கொடுத்தாதீர்கள்.

இந்த காலகட்டத்தில் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் அதனை அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். ஏழரை சனி காலம் என்பதால் சனிபகவான் உடல் உழைப்பை அதிகப்படுத்துவார். அதனால் அலைச்சல் அதிகமாக இருக்கலாம். வேலை செய்பவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என கவலைப்பட வேண்டாம். எல்லாம் நடக்கும் ஆனால் சற்று தாமதமாகும் அவ்வளவுதான். 2025ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி மட்டுமல்லாது குருப்பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சியும் நிகழ உள்ள நிலையில் குரு மூன்றாவது இடத்திற்கு வரும் நேரத்தில் லாபமானது அதிகரிக்கும்.

கடன்கள் வாங்காதீர்கள்

சிலர் சொந்த வீடு வாங்கும் பாக்கியம் அமையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்லபடியாக வரன் அமையும். அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகமாகும். அதேநேரத்தில் நல்ல பலனும் கிடைக்கும். அதே போல் பரணி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். கார்த்திக்கை நட்சத்திரக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்பட்டாலும் பின் நிலைமை சீராகும். சனிப்பெயர்ச்சி காலம் என்பதால் வியாபாரம் செய்பவர்கள் அக்டோபர் மாதம் இறுதி வரை கடன்கள் வாங்காதீர்கள்.

பணியில் கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் கோயில்களுக்கு சென்று கருடாழ்வார் மற்றும் ஹனுமனை வழிபாடு செய்யலாம். மேலும் தாளிக்காத தயிர்சாதம் மற்றும் நல்லெண்ணெய் தானம் செய்யலாம்.

(Disclaimer: இந்தக் கட்டுரை இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கும் ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையிலான தகவல்கள் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. எந்த அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு கிடையாது)

வெளிநாடு பயணங்களை ரத்து செய்த பிரதமர் மோடி.. பின்னணி என்ன?
வெளிநாடு பயணங்களை ரத்து செய்த பிரதமர் மோடி.. பின்னணி என்ன?...
இந்திய ராணுவம் தாக்குதல்.. மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி
இந்திய ராணுவம் தாக்குதல்.. மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி...
ஜெயிலர் 2 படத்திற்காக மோகன்லாலை சந்தித்த நெல்சன் திலீப்குமார்?
ஜெயிலர் 2 படத்திற்காக மோகன்லாலை சந்தித்த நெல்சன் திலீப்குமார்?...
அறியாமையால் உயிரைக் கொள்ளும் பழக்கங்கள்..உங்களிடம் உள்ளதா?
அறியாமையால் உயிரைக் கொள்ளும் பழக்கங்கள்..உங்களிடம் உள்ளதா?...
பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான்.. துலாம் ராசிக்கான பலன்கள்!
பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான்.. துலாம் ராசிக்கான பலன்கள்!...
LIVE : ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி ஆலோசனை
LIVE : ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி ஆலோசனை...
பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி? வீடியோ வெளியீடு
பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி? வீடியோ வெளியீடு...
இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்...
இந்தியா பழிக்கு பழி.. ஆபரேஷன் சிந்தூருக்கு இந்திய வீரர்கள் ஆதரவு
இந்தியா பழிக்கு பழி.. ஆபரேஷன் சிந்தூருக்கு இந்திய வீரர்கள் ஆதரவு...
ஆபரேஷன் சிந்தூருக்கு போடப்பட்ட பிளான்.. நடந்தது எப்படி?
ஆபரேஷன் சிந்தூருக்கு போடப்பட்ட பிளான்.. நடந்தது எப்படி?...
ஆபரேஷன் சிந்தூர்.. ஊடக சந்திப்பை நடத்திய பெண் ராணுவ அதிகாரிகள்!
ஆபரேஷன் சிந்தூர்.. ஊடக சந்திப்பை நடத்திய பெண் ராணுவ அதிகாரிகள்!...