2026 பட்ஜெட்டுக்கு பிறகு ஸ்மார்ட்போன் விலை குறையுமா?.. டெக் துறையின் முக்கிய எதிர்பார்ப்பு! | TV9 Tamil News

2026 பட்ஜெட்டுக்கு பிறகு ஸ்மார்ட்போன் விலை குறையுமா?.. டெக் துறையின் முக்கிய எதிர்பார்ப்பு!

Updated On: 

28 Jan 2026 13:16 PM

 IST

Tech Industry Expectations On Union Budget 2026 | மெமரி சிப்களின் விநியோகம் குறைந்தும், தேவை அதிகரித்தும் இருப்பதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், 2026 மத்திய பட்ஜெட்டில் டெக் துறை இந்த முக்கிய அறிவிப்பை எதிர்பார்க்கிறது.

1 / 5மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 28, 2026) தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 01, 2026 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு துறைகள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு பிறகு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 28, 2026) தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 01, 2026 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு துறைகள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு பிறகு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 / 5

கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன்களின்  விலை உயர்ந்து வருகிறது. இதற்கு செயற்கை நுண்ணறிவுக்கான தேவை அதிகரித்துள்ளது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் அழைப்பு மற்றும் கேமராக்களை தாண்டி ஏஐ-க்கு அதிக சக்தி வாய்ந்த செயலிகள் மற்றும் பெரிய மெமரி சிப்கள் தேவைப்படும்.

3 / 5

முன்னதாக மெமரி சிப் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களிலும், உயர் செயல்திறன் கொண்ட கணினியிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக உலக சந்தையில் மெமரி சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. 

4 / 5

மெமரி சிப்களின் குறைந்த விநியோகம் மற்றும் அதிக தேவை காரணமாக ஸ்மார்ட்போன் விலையில் மிக கடுமையான தாக்கம் ஏற்பட்டது. அதாவது, ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வை சந்திக்க தொடங்கின. இந்த நிலையில் தான் பட்ஜெட்டில் இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

5 / 5

ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது ஸ்மார்ட்போன்களின் விலையை மேலும் அதிகரிக்க வழிவகை செய்யும். எனவே, செல்போன் உதிரி பாகங்களை உள்நாட்டிலே தயாரிப்பது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.