சிசுவின் பாலினத்தை கண்டறிதால் கடும் நடவடிக்கை.. சுகாதாரத்துறை எச்சரிக்கை.. | TV9 Tamil News

சிசுவின் பாலினத்தை கண்டறிதால் கடும் நடவடிக்கை.. சுகாதாரத்துறை எச்சரிக்கை..

Published: 

04 Feb 2026 22:23 PM

 IST

சென்னையில் கருவின் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின்படி, அமைக்கப்பட்ட மாநில மேற்பார்வை குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சு. சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் கருவுறுதலுக்கு முன் பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் அடிப்படையில்

1 / 6சென்னையில் கருவின் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின்படி, அமைக்கப்பட்ட மாநில மேற்பார்வை குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சு. சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் கருவுறுதலுக்கு முன் பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் அடிப்படையில்

சென்னையில் கருவின் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின்படி, அமைக்கப்பட்ட மாநில மேற்பார்வை குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சு. சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் கருவுறுதலுக்கு முன் பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் அடிப்படையில்

2 / 6

பதிவு செய்யப்பட்ட 1,727 அரசு ஸ்கேன் சென்டர்கள் மற்றும் 7,343 தனியார் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2025- ஆம் ஆண்டில் புதிதாக 1,747 ஸ்கேன் சென்டர்கள் அமைப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில், 1,608 மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் தொடர்பாக சில பரிந்துரைகள் தமிழக அரசுக்கு அனுப்பி நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

3 / 6

கடந்த 2025- ஆம் ஆண்டில் மட்டும் இந்த சட்டத்தை மீறியதாக 15 ஸ்கேன் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 934- ஆக இருந்த பாலின விகிதம், தற்போது 2025 முதல் 2026 ஆம் ஆண்டு வரை 941- ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 / 6

இதற்காக கடந்த 1994-ஆம் ஆண்டு PCPNDT என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக அளவு இருந்து வந்த பெண் சிசு கொலைகளை தடுக்கவும், பாலின விகிதத்தை சமநிலை படுத்தவும் அமல்படுத்தப்பட்டது. மேலும், அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட ஸ்கேன் முறைகள் மூலம் பாலினத்தை அறிவதையும் அதனை தெரிவிப்பதையும் தடுப்பதற்காக இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.

5 / 6

இந்த குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் பெரிய அளவிலான தொகை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 / 6

தற்போது, இந்தியாவில் இந்த சட்டம் அமலில் இருப்பதால், இந்தியாவில் இருந்து சிலர் வெளிநாடுகளுக்கு சென்று கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து வருகின்றனர். அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.