சர்வ ஏகாதசி, விஷ்ணுபதி புண்யகாலம்.. வேண்டுதல்கள் நிறைவேற இன்றைய நாளை தவறவிடாதீர்! | TV9 Tamil News

சர்வ ஏகாதசி, விஷ்ணுபதி புண்யகாலம்.. வேண்டுதல்கள் நிறைவேற இன்றைய நாளை தவறவிடாதீர்!

Published: 

13 Feb 2026 15:03 PM

 IST

Sarva Ekadashi: இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் ஏகாதசி விருதம் வளமான வாழ்விற்கு பெருமாலை வளிப்படுங்க மாசிமாத பிரப்பான என்று விஷ்ணுபதி புண்ணிய காலமாகும் விஷ்ணுபதி புண்ணிய காலம் ஏகாதசி சேர்ந்து வருவது அபுர்வமான ஒன்றாகும். இன்று பெருமாளை 27 முறை வளம் வந்து வழிப்பட வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

1 / 5இன்றைய தினம் மிகவும் அரிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீக நாளாகும். மாசி மாதத்தின் முதல் நாள், முதல் வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி மற்றும் விஷ்ணுபதி புண்யகாலம் ஆகியவை ஒன்றாக சேரும் இந்த நாள் மிக அபூர்வமானதாக கருதப்படுகிறது. இத்தகைய நாள் மீண்டும் வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால், இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. பெருமாளை 27 முறை வளம் வந்து வழிப்பட வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும். துளசி மாளை சாட்டி பெருமாளை வளிப்பட பாவங்கள் விலகி நன்றிகள் பெருகும்.

இன்றைய தினம் மிகவும் அரிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீக நாளாகும். மாசி மாதத்தின் முதல் நாள், முதல் வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி மற்றும் விஷ்ணுபதி புண்யகாலம் ஆகியவை ஒன்றாக சேரும் இந்த நாள் மிக அபூர்வமானதாக கருதப்படுகிறது. இத்தகைய நாள் மீண்டும் வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால், இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. பெருமாளை 27 முறை வளம் வந்து வழிப்பட வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும். துளசி மாளை சாட்டி பெருமாளை வளிப்பட பாவங்கள் விலகி நன்றிகள் பெருகும்.

2 / 5

வழிபாட்டு முறைகள்: இந்த அற்புதமான நாளில் காலை நேரத்தில் எழுந்து குளித்து, மனதை ஒருமைப்படுத்தி, ஸ்ரீ மகா விஷ்ணுவை நினைத்து ஒரு எளிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.விஷ்ணுபதி புண்யகாலம் நள்ளிரவு முதல் அடுத்த நாள் காலை வரை நீடிக்கும். இந்த நேரம் ஸ்ரீ மகா விஷ்ணுவின் அருளைப் பெற மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஏகாதசி திதி மற்றும் திருவோணம் நட்சத்திரத்தை விட கூட இந்த புண்யகாலம் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.

3 / 5

தெற்கு திசையைத் தவிர்த்து, எந்த திசையையும் நோக்கி மந்திரத்தை சொல்லலாம். "ஓம் நமோ நாராயணாய" அல்லது "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். இந்த மந்திரத்தை 27 முறை சரியாக எண்ணிக்கையுடன் ஜபித்த பிறகு, மீண்டும் உங்கள் வேண்டுதலை மனமுருகி சொல்ல வேண்டும்.

4 / 5

விரத முறை: முடிந்தவர்கள் அன்னத்தைத் தவிர்த்து (அரிசி உணவு இன்றி), பழங்கள், பால் அல்லது நீர் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, பெருமாள் கதைகளைக் கேட்பது மற்றும் பகவத் கீதையை நினைவு கூறுவது மிகுந்த புண்ணியம் தரும்.

5 / 5

தானங்கள்: இந்த நாளில் அன்னதானம், நீர்தானம், உடைதானம் மற்றும் அரிசி, எள், வெல்லம் போன்ற தானியங்களை தானம் செய்வது மிகவும் சிறப்பானது. சர்வ ஏகாதசி அன்று பெருமாளை வேண்டினால் தொழில் தடைகள் நீங்கும், கடன் சுமை குறையும், நோய் பயம் அகலும், மற்றும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிலைக்கும் என்று நம்பப்படுகிறது.