சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.. முழு விவரம்! | TV9 Tamil News

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.. முழு விவரம்!

Updated On: 

08 Mar 2026 09:16 AM

 IST

Sani Peyarchi 2026: "ஜோதிட சாஸ்திரத்தில் 'ஆயுள்காரகன்' என்றும், தர்மத்திற்கு ஏற்ப பலன்களை வழங்குவதால் 'நீதிமான்' என்றும் போற்றப்படுபவர் சனீஸ்வர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் அமரும் இடத்தைப் பொறுத்தே அவரது வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

1 / 5வாக்கிய பஞ்சாங்கப்படி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நேற்று (மார்ச் 06) கோலாகலமாக நடைபெற்றது. சனீஸ்வர பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு நேற்று பெயர்ச்சியடைந்தார். இந்த இடமாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது, யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து திருநல்லாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் பல்வேறு விளக்கங்களை வழங்கியுள்ளார். அதுபற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நேற்று (மார்ச் 06) கோலாகலமாக நடைபெற்றது. சனீஸ்வர பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு நேற்று பெயர்ச்சியடைந்தார். இந்த இடமாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது, யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து திருநல்லாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் பல்வேறு விளக்கங்களை வழங்கியுள்ளார். அதுபற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

2 / 5

திருநல்லாறு தலச் சிறப்புகள்: திருநல்லாறில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு வேண்டுவன வழங்கும் 'அனுக்கிரக மூர்த்தியாக' அருள் பாலிக்கிறார். இக்கோயிலைச் சுற்றி நலதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகிய குளங்கள் உள்ளன. இதில் நீராடினால் சனி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். சனி பகவானை தரிசித்த பின், அவருக்குப் பிரியமான எள் தீபம் ஏற்றி வழிபடுவது தோஷ நிவர்த்திக்குச் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.

3 / 5

இந்த சனிப்பெயர்ச்சியால் நற்பலன்கள் பெறும் ராசிகள்: ரிஷபம், துலாம் மற்றும் மகரம்: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த சுபமான நற்பலன்களைத் தரும். இதுநாள் வரை அஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட கடக ராசிக்கு, தற்போது ஒன்பதாம் இடமான 'பாக்கிய ஸ்தானத்திற்கு' சனி வருவதால் நற்பலன்கள் கிடைக்கும். விருச்சக ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனி சஞ்சாரம் செய்கிறார். மிதுன ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்திற்குச் சனி சென்றதால், நற்பலன்கள் கிடைக்கும்.

4 / 5

கவனம் தேவைப்படும் ராசிகள்: மேஷம், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் காலம் தொடங்குகிறது. சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனியின் காலம் என்பதால் கூடுதல் கவனம் தேவை. தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியின் காலமும், கன்னி ராசிக்கு கண்டக சனியின் காலமும் தொடங்குகிறது. மீன ராசி என்பது குருவின் வீடாகும். ஒரு சுப கிரகத்தின் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால், அனைத்து ராசிக்காரர்களும் பொதுவாக நற்பலன்களையே பெற முடியும் என்று சிவாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.

5 / 5

ஆயுளை வழங்கக்கூடிய 'ஆயுஷ்காரகனாக' விளங்கும் சனி பகவானை வழிபடுவது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். தோஷம் உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைத்து ராசிக்காரர்களும் திருநல்லாறு வந்து வழிபடலாம். சனிக்கிழமை மட்டுமின்றி, வாரத்தின் அனைத்து நாட்களிலும் திருநல்லாறில் வழிபாடு செய்யலாம், ஒரே மாதிரியான பலன்களே கிடைக்கும். நலதீர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து, திலதீபம் (எள் தீபம்) ஏற்றி வழிபடுவது வாழ்வில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்றுத்தரும்.

Follow Us