சனிப்பெயர்ச்சி 2026.. எந்த ராசியினர் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.. முழு விவரம்.. | TV9 Tamil News

சனிப்பெயர்ச்சி 2026.. எந்த ராசியினர் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.. முழு விவரம்..

Updated On: 

08 Mar 2026 14:25 PM

 IST

Sani Peyarchi 2026: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் 'கர்ம வினைப் பயன்' அளிப்பவர். அவர் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை அளிப்பவர் என்பதை விட, நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர் என்பதே சரி. எனவே, சனிப்பெயர்ச்சி காலத்தில் நற்காரியங்களில் ஈடுபடுவதும், ஏழைகளுக்கு உதவுவதும், இறைவனை வழிபடுவதும் நம்முடைய எதிர்மறையான கர்ம வினைகளைக் குறைக்க உதவும்.

1 / 5ஜோதிடத்தில் ஒருவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக 'சனிப்பெயர்ச்சி' கருதப்படுகிறது. ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிகழும் இந்த சனிப்பெயர்ச்சி, மனிதர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஜோதிடத்தில் ஒருவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக 'சனிப்பெயர்ச்சி' கருதப்படுகிறது. ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிகழும் இந்த சனிப்பெயர்ச்சி, மனிதர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

2 / 5

சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, ஜோதிடர்களின் ஆலோசனைப்படி சில பொதுவான பரிகாரங்களைச் செய்யலாம். அதன்படி, சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல். "ஓம் சனீஸ்வராய நமஹ" அல்லது சனி காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல். சனி பகவானுக்கு உகந்த கருப்பு நிற ஆடை மற்றும் எள் தானமாக வழங்குதல். ஏழை மற்றும் ஊனமுற்றோருக்கு உதவுதல் செய்யலாம்.

3 / 5

சனிப்பெயர்ச்சியின் தாக்கத்தைக் குறைக்க, உங்கள் ராசிக்கு ஏற்ற ஆலயங்களைச் சென்று வழிபடுவது சிறப்பானது என்று ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன்பிட, மேஷ ராசியினர் முருகப்பெருமானையும், ரிஷப ராசியினர் சிவன் மற்றும் பெருமாளையும், மிதுன ராசியினர் ஆஞ்சநேயர் மற்றும் சக்கரத்தாழ்வாரை வழிபடலாம்.

4 / 5

கடக ராசியினர் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி தலம் மற்றும் விநாயகரையும், சிம்ம ராசியினர் காளஹஸ்தி சிவன் மற்றும் துர்க்கையம்மனையும், கன்னி ராசியினர் மேல்மலையனூர் அங்காளம்மன் மற்றும் புட்லூர் அம்மனையும், துலாம் ராசியினர் பட்டீஸ்வரம் மற்றும் துர்க்கையையும், விருச்சிக ராசியினர் முருகன் மற்றும் வைத்தீஸ்வரனையும், தனுசு ராசியினர் மகான்களையும் வழிபடலாம். மேலும், மகர ராசியினர் விநாயகரையும், கும்ப ராசியினர் சிவன் மற்றும் ஆஞ்சநேயரையும், மீனம் ராசியனர் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரையும் வழிபடலாம்.

5 / 5

சனி பகவானுக்குரிய பிரசித்தி பெற்ற தலங்களான திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு மற்றும் குற்றனூர் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. கிரகப் பெயற்சிகள் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், உங்கள் தன்னம்பிக்கையும் கடின உழைப்புமே உங்களை உயர்த்திச் செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆன்மிகம் ஒரு வழிகாட்டி மட்டுமே; செயல்படுவது நீங்களே.

Follow Us