Samantha: ஒரு நல்ல ஆண் மகனுக்கு எடுத்துக்காட்டே அந்த நடிகர்தான் – சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா? | TV9 Tamil News

Samantha: ஒரு நல்ல ஆண் மகனுக்கு எடுத்துக்காட்டே அந்த நடிகர்தான் – சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?

Updated On: 

09 Mar 2026 20:21 PM

 IST

Samantha About best role model for Good Man: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நடிகையாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் நேர்காணல் ஒன்றில், ஒரு நல்ல ஆண் மகனுக்கு எடுத்துக்காட்டு என்றாலே அந்த நடிகர்தான் என கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என விவரமாக பார்க்கலாம்.

1 / 5தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் தொடர்னு புது புது படங்களானது தயாராகிவருகிறது. அந்த வகையில் தமிழில் இவரின் படங்கள் சில ஆண்டுகளாக வெளியாகாத நிலையில், மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலம் ஒருபோதும் குறைந்ததில்லை.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் தொடர்னு புது புது படங்களானது தயாராகிவருகிறது. அந்த வகையில் தமிழில் இவரின் படங்கள் சில ஆண்டுகளாக வெளியாகாத நிலையில், மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலம் ஒருபோதும் குறைந்ததில்லை.

2 / 5

இந்நிலையில் இவர் தற்போது லீட் கதாநாயகியாக மா இன்டி பங்காரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருக்கும் நிலையில், ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் சமந்தா முழுவதும் ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், வரும் 2025 மே 15ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது.

3 / 5

இந்த திரைப்படத்தை தொடர்ந்து புது திரைப்படங்களுக்கான கதைகளையும் சமந்தா கேட்டுவருகிறாராம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குநர் ராஜ் நிதிமோரு என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துவருகிறார். இவர் தமிழிலும் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

4 / 5

சிலம்பரசனின் அரசன் படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க தயாரிப்பாளர் கேட்டிருந்த நிலையில், இன்னும் அது உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சமந்தா, ஒரு சிறந்த ஆண்மகனுக்கு எடுத்துக்காட்டு அந்த நடிகர் என தெரிவித்துள்ளார். அவர் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

5 / 5

நடிகை சமந்தா ரூத் பிரபு, சிறந்த ஆண் மகனுக்கான எடுத்துக்காட்டாக நடிகர் விஜய் தேவரகொண்டா என தெரிவித்திருந்தார். மேலும் விஜய் தேவரகொண்டாவிற்கு எந்த கேட்ட பழக்கங்களும் இல்லை, ஒரு பார்ட்டியில் கூட குடிக்கமாட்டார். வீட்டை விட்டும் பெரிதாக வெளியே செல்லவும் மாட்டார். ஒரு நல்ல ஆண்மகனுக்கு எடுத்துக்காட்டே அவர்தான் என அதில் தெரிவித்திருந்தார்.

Follow Us