Sai Pallavi: எனது பியூட்டி சீக்ரெட் இதுதான்.. நடிகை சாய் பல்லவி சொன்ன ரகசியம்! | TV9 Tamil News

Sai Pallavi: எனது பியூட்டி சீக்ரெட் இதுதான்.. நடிகை சாய் பல்லவி சொன்ன ரகசியம்!

Updated On: 

02 Feb 2026 19:44 PM

 IST

Sai Pallavis Natural Beauty Secrets: தென்னிந்திய சினிமாவின் மூலம் பிரபலமாகி தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி பதித்திருப்பவர் சாய் பல்லவி. இவரின் அழகை கண்டும் பலரும் ஆச்சரிப்படுவது உண்டு. இந்நிலையில் அவரின் அழகின் ரகசியம் குறித்து சாய் பல்லவி சொன்ன சீக்ரட் என்ன என பார்க்கலாம்.

1 / 5மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. கடந்த 2015ம் ஆண்டில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் நுழைந்தார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதன் மூலமாகவே சினிமாவில் பிரபலமாக தொடங்கினர்.

மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. கடந்த 2015ம் ஆண்டில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் நுழைந்தார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதன் மூலமாகவே சினிமாவில் பிரபலமாக தொடங்கினர்.

2 / 5

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் இவர் நடிக்க ஆரம்பித்தார். படங்களில் மற்ற நடிகைகளை போல சாய் பல்லவி அதிகமாக அழகு சாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவது இல்லை. அவரின் நிஜ அழகே ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பிரபலத்தை கொடுத்திருந்தது.

3 / 5

அந்த வகையில் பெரும்பாலும் இவர் படங்களிலும் மேக்கப் செய்து நடித்தது குறைவுதான். மேலும் தெலுங்கில் வெளியான சியாம் சிங்கராய் என்ற படத்தில் மட்டும் பரதநாட்டிய கதாபாத்திரத்திற்காக மட்டுமே இவர் மேக்கப் செய்ததாக அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அந்த விதத்தில் இவரின் பியூட்டி ரகசியம் குறித்து பலரும் சந்தேகத்தில் இருந்த நிலையில், அது குறித்து சாய் பல்லவியே தெரிவித்திருக்கிறார்.

4 / 5

நடிகை சாய் பல்லவி தனது அழகிற்காக பெரிதும், அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவது இல்லையாம். அவர் தினமும் இரவு 9 மணிக்கு முன்னே உறங்கிவிடுவாராம். மேலும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்துவிடுவாராம். எழுந்தது பிராத்தனை, மெடிடேஷன் மற்றும் உடற்பயிற்சி தவறாமல்செய்வதாகவும், மேலும் எப்போதும் இளநீர் குடித்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பாராம்.

5 / 5

நடிகை சாய் பல்லவி, தனது உணவில் தவறாமல் சாதத்திற்குப் பதிலாக காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்வராம். இதனால் தனது சருமம் எப்போதும் பொலிவுடன் இருப்பதாகவும். எப்போதும் சன்ஸ்க்ரீன் தவறாமல் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவே சாய் பல்லவியின் பியூட்டி சீக்ரட்டாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.