குடியரசு தின பேரணியில் புதிய அம்சங்கள்: ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் அமைப்பு, பைரவ் படை, பாக்ட்ரியன் ஒட்டகங்கள் | TV9 Tamil News

குடியரசு தின பேரணியில் புதிய அம்சங்கள்: ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் அமைப்பு, பைரவ் படை, பாக்ட்ரியன் ஒட்டகங்கள்

Published: 

25 Jan 2026 13:44 PM

 IST

ஆழமான தாக்குதல் திறன் கொண்ட ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் ஏவுகணை அமைப்பு, புதிதாக உருவாக்கப்பட்ட பைரவ் லைட் கமாண்டோ படைப்பிரிவு, மேலும் ஜான்ஸ்கர் குதிரைகள் மற்றும் பாக்ட்ரியன் ஒட்டகங்கள் ஆகியவை இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக இடம்பெறவுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23, 2026) தெரிவித்தனர். முதன்முறையாக, 61வது குதிரைப் படை (61 Cavalry) உறுப்பினர்கள் போர்க்கள உடையுடன் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். அதேபோல், வீரர்களுடன் இணைந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய ராணுவ உபகரணங்கள், “கட்டப் படி போர்க்கள அணிவகுப்பு (Phased Battle Array Formation)” வடிவில் கர்த்தவ்ய பாதை வழியாக நகரும்.

1 / 6ஆழமான தாக்குதல் திறன் கொண்ட ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் ஏவுகணை அமைப்பு, புதிதாக உருவாக்கப்பட்ட பைரவ் லைட் கமாண்டோ படைப்பிரிவு, மேலும் ஜான்ஸ்கர் குதிரைகள் மற்றும் பாக்ட்ரியன் ஒட்டகங்கள் ஆகியவை இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக இடம்பெறவுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23, 2026) தெரிவித்தனர். முதன்முறையாக, 61வது குதிரைப் படை (61 Cavalry) உறுப்பினர்கள் போர்க்கள உடையுடன் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். அதேபோல், வீரர்களுடன் இணைந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய ராணுவ உபகரணங்கள், “கட்டப் படி போர்க்கள அணிவகுப்பு (Phased Battle Array Formation)” வடிவில் கர்த்தவ்ய பாதை வழியாக நகரும்.

ஆழமான தாக்குதல் திறன் கொண்ட ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் ஏவுகணை அமைப்பு, புதிதாக உருவாக்கப்பட்ட பைரவ் லைட் கமாண்டோ படைப்பிரிவு, மேலும் ஜான்ஸ்கர் குதிரைகள் மற்றும் பாக்ட்ரியன் ஒட்டகங்கள் ஆகியவை இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக இடம்பெறவுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23, 2026) தெரிவித்தனர். முதன்முறையாக, 61வது குதிரைப் படை (61 Cavalry) உறுப்பினர்கள் போர்க்கள உடையுடன் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். அதேபோல், வீரர்களுடன் இணைந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய ராணுவ உபகரணங்கள், “கட்டப் படி போர்க்கள அணிவகுப்பு (Phased Battle Array Formation)” வடிவில் கர்த்தவ்ய பாதை வழியாக நகரும்.

2 / 6

பொதுவாக சீருடை மற்றும் தனித்துவமான தலை அலங்காரத்துடன் பாரம்பரிய அணிவகுப்பில் முன்னணியில் இடம்பெறும் 61 Cavalry, இந்த ஆண்டு முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்படும். இந்த அணிவகுப்பில், ஆர்டிலரி பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட ‘சக்திபான் ரெஜிமென்ட்’ முதன்முறையாக அறிமுகமாகிறது. இந்த புதிய படைப்பிரிவு ட்ரோன், எதிர்-ட்ரோன் அமைப்புகள் மற்றும் லாயிட்டர் மியூனிஷன் ஆகியவற்றுடன் செயல்படும்.

3 / 6

77வது குடியரசு தின அணிவகுப்பு இந்த ஆண்டு பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது. கனமான வெப்ப உடைகளுடன் (Thermal Gear) கூடிய கலப்பு ஸ்கவுட்ஸ் படைப்பிரிவு கூட முதன்முறையாக அணிவகுப்பில் பங்கேற்கிறது. பைரவ் லைட் கமாண்டோ படைப்பிரிவு, கடந்த ஜனவரி 15 அன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராணுவ தின அணிவகுப்பில் அறிமுகமாகியது. இந்த படைப்பிரிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டது.

4 / 6

இந்த ஆண்டு அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட உள்ள முக்கிய பாதுகாப்பு உபகரணங்களில்: பிரம்மோஸ் ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, நடுத்தர தூர தரையிலிருந்து வானுக்கு ஏவுகணை (MRSAM), ATAGS (Advanced Towed Artillery Gun System), தனுஷ் ஆர்டிலரி துப்பாக்கி, சக்திபான், சில ட்ரோன்களின் நிலை காட்சி (Static Display),ஆகியவை இடம்பெறும். மொத்தம் 18 நடை அணிவகுப்பு குழுக்கள் மற்றும் 13 இசைக்குழுக்கள் இந்த 90 நிமிடங்கள் நீடிக்கும் அணிவகுப்பில் பங்கேற்கும் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

5 / 6

300 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் கொண்ட ‘சூர்யாஸ்திரா’ யூனிவர்சல் ராக்கெட் லாஞ்சர் அமைப்பு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது என்று மேஜர் ஜெனரல் தில்லன் தெரிவித்தார்.

6 / 6

ரீமவுண்ட் வெட்டரினரி கார்ப்ஸ் (RVC) அணிவகுப்பை வழிநடத்த உள்ள கேப்டன் ஹர்ஷிதா ராகவ், இதில் 2 பாக்ட்ரியன் ஒட்டகங்கள், 4 ஜான்ஸ்கர் குதிரைகள், 4 பறவைகள் மற்றும் சில ராணுவ நாய்கள் இடம்பெறும் என்று தெரிவித்தார். வான்வழி அணிவகுப்பும் இதே போர்க்கள வடிவில் நடைபெறும். இரண்டு கட்டங்களாக நடைபெறும் விமானக் கண்காட்சி (Flypast)-இல்: ரஃபேல், சு-30, P-8I, மிக்-29, அபாச்சி, LCH, ALH, Mi-17, C-130, C-295 உள்ளிட்ட மொத்தம் 29 விமானங்கள் பங்கேற்கின்றன.