கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது சிக்கல்.. இந்த விஷயம் குறித்து தெரியுமா? | TV9 Tamil News

கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது சிக்கல்.. இந்த விஷயம் குறித்து தெரியுமா?

Updated On: 

06 May 2026 20:17 PM

 IST

Common Credit Card Mistake | தற்போது பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், கிரெடிட் கார்டை பயன்படுத்தாமலே வைத்திருப்பது தேவையற்ற கட்டணத்தை வழிவகுக்கும் என கூறப்பட்டுகிறது. இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே உள்ளது குறித்த சிக்கல் குறித்து பார்க்கலாம்.

1 / 5தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே கிரெடிட் கார்டு மாறிவிட்டது. விலைவாசி உயர்வு காரணமாக செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை பூர்த்தி செய்ய பலரு  கிரெடிட் கார்டு உதவியை நாடுகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு குறித்து கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. 

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே கிரெடிட் கார்டு மாறிவிட்டது. விலைவாசி உயர்வு காரணமாக செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை பூர்த்தி செய்ய பலரு  கிரெடிட் கார்டு உதவியை நாடுகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு குறித்து கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. 

2 / 5

அத்தகைய விஷயங்களில் ஒன்றுதான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமலே வைத்திருப்பது. கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துவது எவ்வளவு சிக்கல்களை உண்டாக்குமோ அதேபோல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் இருப்பதும் உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். 

3 / 5

நீங்கள் கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு அதனை பயன்படுத்தாமலே வைத்துள்ளீர்கள். தொடர்ந்து 3 முதல் 12 மாதங்கள் வரை உங்களது கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்தாமலே இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு கிரெடிட் கார்டை வழங்கிய வங்கி, உங்களது செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கும். 

4 / 5

கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய விதிகளை விதித்துள்ளது. அதாவது, உங்களது கிரெடிட் கார்டை நிரந்தரமாக க்ளோஸ் செய்வதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்க வெண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு இடைபட்ட காலத்தில் நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம். 

5 / 5

இந்த நிலையில், நீங்கள் கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு, அதை வைத்து எந்த செலவும் செய்யாமல் இருந்துக்கொண்டு வெறும் பின் நம்பர் மற்றும் மாற்றம் செய்தாலோ அல்லது ஸ்டேட்மெண்ட்டை அவ்வப்போது சோதனை செய்தாலோ அது பயன்பாட்டில் உள்ளதாக கருதப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us