M.Appavu Tamil Nadu Election: அன்று முதல் இன்று வரை.. மு.அப்பாவு கட்டுப்பாட்டில் ராதாபுரம் தொகுதி.. இந்த முறை எப்படி! | TV9 Tamil News

M.Appavu Tamil Nadu Election: அன்று முதல் இன்று வரை.. மு.அப்பாவு கட்டுப்பாட்டில் ராதாபுரம் தொகுதி.. இந்த முறை எப்படி!

Published: 

23 Mar 2026 11:29 AM

 IST

Tamil Nadu Elections 2026: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முதல் (இடையே சுயேட்சையாக ) திராவிட முன்னேற்றக் கழகம் வரை ராதாபுரம் தொகுதியில் தொடர் வெற்றியை பதிவு செய்து வரும் மு. அப்பாவு மீண்டும் தனது வெற்றியை பதிவு செய்வாரா.

1 / 5தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்து வருபவர்  மு. அப்பாவு.  இவர்,  கடந்த  1952- ஆம் ஆண்டு ஜனவரி 20- ஆம் தேதி  பிறந்தார்.  இவரது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை  ஜி.கே.  மூப்பனார் தொடங்கிய  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கியது. அப்போது,  1996- ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில்  ராதாபுரம்  தொகுதியில்  களமிறக்கப்பட்ட  அப்பாவு  முதல்  தேர்தலிலேயே  தனது முத்தான முதல் வெற்றியை  பதிவு செய்ததுடன், சட்டமன்றத்துக்குள்  அடியெடுத்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்து வருபவர் மு. அப்பாவு. இவர், கடந்த 1952- ஆம் ஆண்டு ஜனவரி 20- ஆம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை ஜி.கே. மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கியது. அப்போது, 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் ராதாபுரம் தொகுதியில் களமிறக்கப்பட்ட அப்பாவு முதல் தேர்தலிலேயே தனது முத்தான முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.

2 / 5

பின்னர், கடந்த 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு விரும்பினார். ஆனால், அன்றைய காலகட்டத்தில் அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்த வேறொரு நபருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் கட்சியில் இருந்து வெளியேறிய மு.அப்பாவு அதே தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதுடன் தனது செல்வாக்கையும் அந்த தேர்தலில் நிரூபித்து காண்பித்தார்.

3 / 5

பின்னர், அதிமுக தலைமைக்கும், அப்பாவுவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த 2006- ஆம் ஆண்டு திமுகவின் அப்போதைய தலைவரும், மறைந்த முதல்வருமான மு. கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட மு. அப்பாவு தனக்கான வெற்றி வாகையை சூடினார். 2016- ஆம் ஆண்டு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் களமிறக்கப்பட்ட அப்பாவு தோல்வியை தழுவினார். இதை தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் களம் கண்ட மு. அப்பாவு தனக்கான வெற்றிக் கனியை எட்டிப் பிடித்தார்.

4 / 5

கடந்த 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமாக சார்பில் ராதாபுரம் தொகுதியில் களமிறங்கிய அப்பாவு தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எல். கே. சந்திரசேகரனை வீழ்த்தி 46 சதவீத வாக்குகள் பெற்றார். 2001 தேர்தலில் சயேட்சையாக களமிறங்கிய அப்பாவு பாமக வேட்பாளர் எஸ். ஜோதியை வீழ்த்தி 45.40 சதவீத வாக்குகள் பெற்றார். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய அப்பாவு அதிமுக வேட்பாளர் எல். ஞான புனிதாவை வீழ்த்தி 43.36 சதவீத வாக்குகள் பெற்றார்.

5 / 5

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ. எஸ். இன்ப துரையிடம் தோல்வியை தழுவினார். 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ. எஸ். இன்ப துரையை வீழ்த்தி 44.17 சதவீத வாக்குகள் பெற்று எம்எல்ஏவாக ஆனதுடன், சட்டப்பேரவை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் செல்வாக்குடைய மு.அப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் வெற்றியையும் அவர் பதிவு செய்வார் என்று கள நிலவரம் கூறுகிறது.

Follow Us
Related Stories
பங்குனி வளர்பிறை சஷ்டி.. வீட்டிலேயே வழிபடுவது எப்படி?.. பிரச்னைகளை தீர்க்கும் அறிய நாளை தவறவிடாதீர்..
IPL 2026: ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள்.. ரெக்கார்ட் மேல் ரெக்கார்ட் வைத்த கெய்ல்..!
Sreeleela: அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.. இப்போது அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன் – ஸ்ரீலீலா!
அதிகரிக்கும் கோடை வெப்பம்? ரூ.10 லட்சத்துக்குள் கிளைமேட் கண்டரோல் வசதியுடைய கார்கள் – டாப் 5 இதோ!
Anbil Mahesh Poyyamozhi Tamil Nadu Election: இருமுறை வெற்றி வாய்ப்பு… திருவெறும்பூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவாரா அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
பங்குனி உத்திரம் 2026.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீக பலன்களும், விளக்கமும்..