காரடையான் நோன்பு.. பெண்களே விரதம் இருக்க முடியாவிட்டாலும்.. இதை தவறவிடாதீர்கள்!! | TV9 Tamil News

காரடையான் நோன்பு.. பெண்களே விரதம் இருக்க முடியாவிட்டாலும்.. இதை தவறவிடாதீர்கள்!!

Published: 

14 Mar 2026 15:06 PM

 IST

Karadaiyan Nombu 2026: காரடையான் நோன்பு என்பது வெறும் விரதம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் கணவரின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் புனிதமான வழிபாடாகும். கடினமான விரத முறைகளைப் பின்பற்ற முடியாவிட்டாலும், நம்பிக்கையுடன் இந்த எளிய வழிபாடுகளைச் செய்வதன் மூலம் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பது ஐதீகம்.

1 / 52026-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி (மாசி மாதம் 30-ம் தேதி), சனிக்கிழமையன இன்று காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் சுமங்கலி பெண்களுக்கு மிகவும் விசேஷமான நாளாகும். சாவித்திரி தனது கணவர் சத்தியவானின் உயிரை எமதர்மனிடம் இருந்து மீட்டெடுத்த நாளை நினைவுறுத்தும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒருவேளை உங்களால் முழுமையாக விரதம் இருக்க முடியாவிட்டாலும் அல்லது தாளிக்கயிறு மாற்றும் வழக்கம் இல்லாவிட்டாலும், உங்கள் கணவரின் ஆயுள் மற்றும் வருமானம் பெருக கீழ்க்கண்ட எளிய விஷயங்களைச் செய்யலாம்.

2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி (மாசி மாதம் 30-ம் தேதி), சனிக்கிழமையன இன்று காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் சுமங்கலி பெண்களுக்கு மிகவும் விசேஷமான நாளாகும். சாவித்திரி தனது கணவர் சத்தியவானின் உயிரை எமதர்மனிடம் இருந்து மீட்டெடுத்த நாளை நினைவுறுத்தும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒருவேளை உங்களால் முழுமையாக விரதம் இருக்க முடியாவிட்டாலும் அல்லது தாளிக்கயிறு மாற்றும் வழக்கம் இல்லாவிட்டாலும், உங்கள் கணவரின் ஆயுள் மற்றும் வருமானம் பெருக கீழ்க்கண்ட எளிய விஷயங்களைச் செய்யலாம்.

2 / 5

வீட்டில் எளிய வழிபாடு: காலையில் நீராடிவிட்டு, வீட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவது சிறந்தது. அம்மனுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் ஒரு டம்ளர் பால் நிவேதனமாக வைக்கலாம். விரதம் இருக்காதவர்கள் கூட, தீபம் ஏற்றி வைத்த பிறகு கீழ்க்கண்ட நான்கு வரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்வது கணவரின் தீர்க்க ஆயுளுக்கும், அவர் உங்களை விட்டு நீங்காமல் இருப்பதற்கும் உதவும்.

3 / 5

"உருகாத வெண்ணெயும் ஓர் அடையும் நோற்று உனக்கு நான் வைத்தேன்; என்னாளும் என் கணவர் என்னை விட்டு நீங்காத அருள் தருவாய்." இந்த மந்திரத்தை ஒரு முறையாவது சொல்ல வேண்டும். நேரம் இருப்பவர்கள் 27 முறை வரை சொல்லலாம். இது உங்கள் கணவர் உங்கள் மீது அன்புடன் இருக்கவும், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவும் உதவும்.

4 / 5

இந்த நாளில் சுமங்கலி பெண்களுக்கோ அல்லது கன்னிப் பெண்களுக்கோ தானம் வழங்குவது மிகச்சிறந்த பலனைத் தரும். 3, 5, 7 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் பெண்களுக்கு, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கயிறு மற்றும் பூ, மஞ்சள், குங்குமம் ஆகிய பொருட்களைத் தாம்பூலமாக வழங்கலாம். வசதி இருப்பவர்கள் ரவிக்கைத் துணி சேர்த்துக் கொடுக்கலாம். வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மங்கள பொருட்களை வழங்குவது மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும்.

5 / 5

தாளிக்கயிறு மாற்றும் நேரம்: மாசி மாதத்தில் தாளிக்கயிறு மாற்றுவது தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைத் தரும். பழைய கயிற்றை மாற்ற விரும்புவோர், இன்று காலையே 7.30 முதல் 8.30 மணிக்குள் மாற்றி இருந்தால் சிறப்பு. உச்சி பொழுதுக்கு (நண்பகல் 12 மணிக்கு) மேல் கயிறு மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

Follow Us