துபாயில் இருந்து தங்கம் வாங்கி வருவது லாபகரமானதா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்! | TV9 Tamil News

துபாயில் இருந்து தங்கம் வாங்கி வருவது லாபகரமானதா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

Updated On: 

15 Feb 2026 08:08 AM

 IST

Is Buying Gold From Dubai Really Benefits | இந்தியாவை விட துபாயில் தங்கம் விலை குறைவாக இருப்பதனால் பலரும் துபாயில் தங்கம் வாங்க யோசிப்பர். ஆனால், உண்மையில் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் வாங்கி வருவது லாபகரமானதா என்பது குறித்து பார்க்கலாம்.

1 / 5உலக அளவில் தங்கம் தற்போது கடும் உச்சத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சில உலக நாடுகளில் தங்கம் சற்று குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக துபாயில் இந்தியாவை விட குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. வரி வித்தியாசம் உள்ளதன் காரணமாக இந்த மாற்றங்கள் உள்ளன.

உலக அளவில் தங்கம் தற்போது கடும் உச்சத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சில உலக நாடுகளில் தங்கம் சற்று குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக துபாயில் இந்தியாவை விட குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. வரி வித்தியாசம் உள்ளதன் காரணமாக இந்த மாற்றங்கள் உள்ளன.

2 / 5

இந்த நிலையில், இந்தியர்கள் பலரும் இந்தியாவை விட துபாயில் தங்கம் விலை குறைவாக இருப்பதால் அங்கு சென்று தங்கம் வாங்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் துபாயில் தங்கம் வாங்குவது லாபகரமானதா, அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

3 / 5

துபாயில் ஒரு ஆண்டுக்கு மேல் தங்கியிருந்தவர்களுக்கு மட்டுமே இந்தியாவுக்கு தங்கம் வாங்கி வருவதில் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஒரு ஆண்டுக்கும் மேல் துபாயில் தங்கிருந்தவர்கள் ஆணாக இருந்தால் 20 கிராம் வரையும், பெண்ணாக இருந்தால் 40 கிராம் வரையும் வரி இல்லாமல் தங்கம் எடுத்து வர அனுமதி வழங்கப்படுகிறது. 

4 / 5

இந்த வரி விலக்கு ஆபரண தங்கங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதுவே பார்கள் மற்றும் நாணயங்கள் வாங்க நினைத்தால் அதற்கு வரி விலக்கு வழங்கப்படாது. இவ்வாறு நாணயங்கள் மற்றும் பார்களாக இந்தியாவுக்கு 1 கிலோ வரை தங்கம் கொண்டுவரலாம். ஆனால், அதற்கு முறையாக வரி செலுத்த வேண்டும். 

5 / 5

குறுகிய காலம் துபாய் செல்பவர்களுக்கு, அதாவது சுற்றுலா பயணிகளுக்கு வரி விலக்கு வழங்கப்படாது. ஒருவேளை சுற்றுலா சென்றவர்கள் துபாயில் இருந்து தங்கம் வாங்கி வந்தால் ஒவ்வொரு கிராமுக்கும் வரி விதிக்கப்படும். அவ்வாறு எடுத்து வரும் தங்கத்தை சுங்கத்துரையிடம் சரியான பில் உடன் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

Follow Us