இனி இன்ஸ்டாகிராமில் End-to-end Encryption அம்சம் இருக்காது.. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு? | TV9 Tamil News

இனி இன்ஸ்டாகிராமில் End-to-end Encryption அம்சம் இருக்காது.. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு?

Updated On: 

14 Mar 2026 16:17 PM

 IST

Instagram To Drop Encrypted Chats Soon | மெட்டாவின் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் End - to - end encryption அம்சம் உள்ளது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் இந்த End - to - end encryption அம்சத்தை நீக்க உள்ளதாக மெட்டா கூறியுள்ளது.

1 / 5மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல்வேறு அம்சங்கள் இந்த செயலியில் உள்ள நிலையில், இது பலருக்கும் மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இந்த நிலையில் தான் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை மெட்டா வெளியிட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல்வேறு அம்சங்கள் இந்த செயலியில் உள்ள நிலையில், இது பலருக்கும் மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இந்த நிலையில் தான் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை மெட்டா வெளியிட்டுள்ளது. 

2 / 5

அதாவது இனி இன்ஸ்டாகிராம் செயலியில் சாட்களுக்கு End-to-end encryption வழங்கப்படாது என கூறியுள்ளது. 2023, டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அம்சம், மே 8, 2026 முதல் செயல்படாது என மெட்டா தெரிவித்துள்ளது. இந்த அம்சம் நீக்கப்படும் பட்சத்தில் நீங்கள் இன்ஸ்டாகிராமில் அனுப்பும் குறுஞ்செய்திகள் End-to-end encrypted ஆக இருக்காது. 

3 / 5

இந்த அம்சம் அமலுக்கு வருவதற்கு முன்னதாக பயனர்கள் தங்களது சாட்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று மெட்டா கூறியுள்ளது. ஆனால், பயனர்கள் தங்களது சாட்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் அவர்களது இன்ஸ்டாகிராம் செயலி சமீபத்திய வர்ஷனுக்கு அப்டேட் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளது. 

4 / 5

மெட்டாவின் இந்த நடைமுறை அதன் வேறு சில செயலிகளிலும் மேற்கொள்ளப்படுமா, குறிப்பாக ஃபேஸ்புக் செயலியில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஃபேஸ்புக் உள்ளிட்ட தனது மற்ற செயலிகளில் இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் எதையும் மெட்டா வெளியிடாமல் உள்ளது. 

5 / 5

இன்ஸ்டாகிராம் செயலியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த அம்சத்தை நீக்குவதன் மூலம் சிறுவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் நடைபெறும் பாலியல் தொல்லைகளை தடுக்க வழிவகை செய்யப்படும் என்று மெட்டா கூறியுள்ளது. 

Follow Us
Related Stories
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!!
E. V. Velu Tamil Nadu Election: அதிமுக டூ திமுக.. எ.வ.வேலு கோட்டையாக திகழும் திருவண்ணாமலை… மீண்டும் வெற்றிக் கொடியை பறக்கவிடுவாரா!
காரடையான் நோன்பு.. பெண்களே விரதம் இருக்க முடியாவிட்டாலும்.. இதை தவறவிடாதீர்கள்!!
T20 World Cup 2026: அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட சூர்யகுமார் யாதவ்.. இந்திய அணியில் நடந்தது என்ன?
Durai Murugan Tamil Nadu Election: காட்பாடி தொகுதியில் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரர்.. மீண்டும் வெற்றியை தனதாக்கி கொள்வாரா துரைமுருகன்!
Anishima Anilkumar: தனுஷ் சாரின் பிக் ஃபேன்.. நேரில் பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கு – அனிஷிமா அனில்குமார்!